Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அடுத்த கட்டத்திற்கு முன்னேறவிருக்கும் மின்சார வாகனப் பகிர்வுத் திட்டம்

சிங்கப்பூர் முதல் ஆகப் பெரிய மின்சார வாகனப் பகிர்வுத் திட்டம், வரும் திங்கட்கிழமை முதல், அடுத்த கட்டத்திற்கு முன்னேறவிருக்கிறது.

வாசிப்புநேரம் -
அடுத்த கட்டத்திற்கு முன்னேறவிருக்கும் மின்சார வாகனப் பகிர்வுத் திட்டம்

கோப்புப் படம்: Today

சிங்கப்பூர் முதல் ஆகப் பெரிய மின்சார வாகனப் பகிர்வுத் திட்டம், வரும் திங்கட்கிழமை முதல், அடுத்த கட்டத்திற்கு முன்னேறவிருக்கிறது.

அதன்படி, Blue SG நிறுவனம் மின்சார வாகனங்களுக்கான தொழில்நுட்ப சோதனைகளைத் தொடங்கவிருக்கிறது. அதன்மூலம் சேகரிக்கப்படும் கருத்துகளைக் கொண்டு, அத்திட்டம் பொதுமக்களுக்கு ஆயத்தமான கட்டத்தை எட்டியிருப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.   அடுத்த மாதம் துவங்கப்படவிருக்கும் அந்தத் திட்டத்திற்கு அத்தகைய சோதனைகள் அவசியம் என்று கூறப்பட்டது.

மின்சார வாகனங்களுக்கான மின்சாரம் ஏற்றும் நிலையங்கள், மத்திய வட்டாரம், தோ பாயோ, ஜூரோங் ஈஸ்ட் ஆகிய பகுதிகளில் அமையப் பெற்றிருக்கும். அத்தகைய ஒன்பது நிலையங்கள், அடுத்த மாதம் முதல் செயல்படத் தொடங்கும் என்று Blue SG நிறுவனம் கூறியது.  

ஆனால், அடுத்த மாத இறுதிக்குள், அத்தகைய நிலையங்களின் எண்ணிக்கை 30க்கு அதிகரிக்கப்படும் என்று நிறுவனம் கூறியது. மேலும், அந்த நிலையங்கள் சிங்கப்பூரின் பல பகுதிகளிலும் அமையப் பெற்றிருக்கும் என்று அது தெரிவித்தது.

2020ஆம் ஆண்டுக்குள், 1000 மின்சார வாகனங்களையும், 2000 மின்சார இணைப்புகளையும் கொண்டிருப்பது நிறுவனத்தின் இலக்கு என்றும் கூறப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்