Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கடன் வாங்குவதற்கான விதிமுறைகளைக் கடுமையாக்கும் சிங்கப்பூர் நாணய வாரியம்

சிங்கப்பூரில், மிதமிஞ்சிக் கடன் வாங்கி அவதிப்படுவோர், மறுபடியும் கடன் வாங்குவதற்கான நிபந்தனைகளை,சிங்கப்பூர் நாணய வாரியம் கடுமையாக்கியுள்ளது.

வாசிப்புநேரம் -
கடன் வாங்குவதற்கான விதிமுறைகளைக் கடுமையாக்கும் சிங்கப்பூர் நாணய வாரியம்

படம்: Today

சிங்கப்பூரில், மிதமிஞ்சிக் கடன் வாங்கி அவதிப்படுவோர், மறுபடியும் கடன் வாங்குவதற்கான நிபந்தனைகளை,சிங்கப்பூர் நாணய வாரியம் கடுமையாக்கியுள்ளது.

மாதாந்தர வருமானத்தைப் போல் ஆறு மடங்குக்கு அதிகமான அளவில், அடைமானம் இல்லாக் கடன் உள்ளவர்கள், அடுத்த மாதத்திலிருந்து புதிதாகக் கடன்பெற முடியாது.

அதன்படி அவர்கள் தங்களுடைய பழைய கடன் உச்சவரம்பை உயர்த்தவோ, புதிய அடைமானமில்லாக் கடனைப் பெறவோ முடியாது.

கடன்பற்று அட்டையைத் தகுதிக்கு மீறிப் பயன்படுத்தியதால் உருவாகும் கடன், அடைமானமில்லாக் கடன்களில் ஒன்று.

புதிய நிபந்தனை, வீட்டு அடைமானக் கடன், கல்வி, வர்த்தகம், மருத்துவக் காரணங்களுக்காக எடுத்த கடனுக்குப் பொருந்தாது.

மாத வருமானத்தைப் போல் ஆறு முதல் 12 மாதம் வரையிலான அடைமானமில்லாக் கடனால் அவதிப்படுவோருக்கு உதவும் வகையில், புதிய நடவடிக்கையை, வாரியம் அறிவித்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்