Images
  • hdb

வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் சுமார் 8,750 வீடுகள் விற்பனைக்கு....

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், தேவைக்கு ஏற்ப கட்டி விற்கப்படும் திட்டம், எஞ்சிய வீட்டுகளின் விற்பனைத் திட்டம் ஆகியவற்றின் கீழ், வீடுகளை விற்பனைக்கு விட்டுள்ளது.

அதன் விவரங்கள்:

--விற்பனைக்கு விடப்பட்டிருக்கும் வீடுகள் - சுமார் 8,750

--வீடுகள் அமைந்திருக்கும் பேட்டைகள் -25

--அவற்றுள், தேவைக்கு ஏற்ப கட்டி விற்கப்படும் திட்டம் - கிட்டத்தட்ட 4,800 வீடுகள்

--எஞ்சிய வீட்டுகளின் விற்பனைத் திட்டத்தின் கீழ் - சுமார் 3,950 வீடுகள்

--வீடுகளின் வகைகள் - ஈரறை வீடுகள் முதல் மூன்று          தலைமுறையினருக்கான வீடுகள் வரை 

சிங்கப்பூரர்களின் வீட்டுத் தேவையைப் பூர்த்திசெய்ய, இவ்வாண்டின் முற்பாதியில் மொத்தம் சுமார் 12,800 வீடுகளைக் கழகம் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. 

உங்கள் கருத்து

Top