Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புதுப் பொலிவுடன் Cloud Forest காட்சிக் கூடம்

கரையோரப் பூந்தோட்டத்திலுள்ள Cloud Forest காட்சிக் கூடம் பார்வையாளர்களுக்குப் புதிய அனுபவம் தரும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
புதுப் பொலிவுடன் Cloud Forest காட்சிக் கூடம்

படம்: Fann Sim

கரையோரப் பூந்தோட்டத்திலுள்ள Cloud Forest காட்சிக் கூடம் பார்வையாளர்களுக்குப் புதிய அனுபவம் தரும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

படம்: Fann Sim 

கரையோரப் பூந்தோட்டம் திறக்கப்பட்ட 5 ஆண்டுகளில், Cloud Forest-இல் இத்தகைய மேம்பாட்டுப் பணி மேற்கொள்ளப்படுவது இதுவே முதன்முறை.

சுண்ணாம்புக்கல் காடுகளிலும் குகைகளிலும் மட்டுமே பொதுவாதக் காணக்கூடிய 7,000க்கும் அதிகமான செடி, கொடிகள்...

Cloud Forest-இல் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள அம்சங்களில் அவையும் உண்டு.

படம்: Fann Sim 

தென்னமெரிக்காவிலும் ஆசியாவிலும் அருகிவரும் அத்தகைய வசிப்பிடங்களை மறுஉருவாக்கம் செய்யும் முயற்சியின் ஒரு பகுதி அவை.

சிங்கப்பூரிலேயே இங்கு மட்டும்தான், நேரடியாக சுண்ணாம்புக்கல் பாறைகளைப் பார்க்கமுடியும்.

சீனாவிலுள்ள குகை ஒன்றிலிருந்து அவை இங்கு தருவிக்கப்பட்டுள்ளன.

அதிக சிரமத்தோடு அது உருவாக்கப்பட்டதாகச் சொன்னார், கரையோரப் பூந்தோட்ட வாரியத்தின் இயக்குநர் டான் ஜியூ ஹோ.

குளிரூட்டப்பட்ட காட்சிக் கூடத்தில், சின்னஞ்சிறிய ஆர்க்கிட் மலர்களும் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கக் கண்டங்களில் காணப்படும் சுமார் 70,000 வகையான செடி, கொடிகள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

உலக வெப்ப உயர்வு பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில், Cloud Forest-இன் பல்லூடகக் காட்சியகமும் கலையரங்கும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்