Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அரை மணிநேரத்தில் 2 கிலோ 'சில்லி கிராப்' சாப்பிடத் தயாரா?

"சில்லி கிராப்" என்று கேட்டவுடன் பலருக்கு நாவூறும். ஆனால் உண்பது எளிதல்ல

வாசிப்புநேரம் -
அரை மணிநேரத்தில் 2 கிலோ 'சில்லி கிராப்' சாப்பிடத் தயாரா?

(படம்: Sonia Yeo)

"சில்லி கிராப்" என்று கேட்டவுடன் பலருக்கு நாவூறும்.

ஆனால் உண்பது எளிதல்ல. ஓட்டை உடைக்கவேண்டும்; உள்ளிருக்கும் சுவையான சதைப்பகுதியைச் சிறிதுசிறிதாக எடுத்துச் சுவைக்கவேண்டும். அதில் சிலர் பொறுமை இழப்பதும் உண்டு. 

சில்லி கிராப்புக்குப் பெயர்பெற்ற பான் லியோங் வாஹ் ஹோ உணவகம், நண்டுப் பிரியர்களுக்கு ஒரு சவால் விடுத்துள்ளது. 2 கிலோ நண்டு, ஆறு பன்கள்- இதை சாப்பிட்டு முடிக்க அரை மணிநேரம். 

அதன் விலை 120 வெள்ளிக்கும் மேல். முடித்துவிட்டால், கட்டணம் செலுத்தவேண்டாம். மேலும் அவர்களது பெயரும் படமும் வெளியிடப்படும்.

முடிக்காவிட்டால்?

88 வெள்ளியையும், சேவைக்கட்டணத்தையும் எடுத்து வைத்துவிட்டுக் கிளம்புங்கள் என்கிறது உணவகம். 

சில்லி கிராப்பை உள்ளூர் உணவுப் பட்டியலில் முக்கிய இடத்துக்குக் கொண்டுவரவேண்டும். அதுவே போட்டியின் நோக்கம் என்கின்றனர் உணவகத்தார்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்