Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உடற்குறையுள்ளோருக்கான கார் நிறுத்துமிடத் திட்டம் குறித்து அமைச்சு விளக்கம்

உடற்குறையுள்ளோருக்கான கார் நிறுத்துமிடத் திட்டம் குறித்து அமைச்சு விளக்கம்

வாசிப்புநேரம் -

உடற்குறையுள்ளோருக்கான கார் நிறுத்துமிடத் திட்டம் குறித்து சமூகக் குடும்ப மேம்பாட்டு அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.

உடற்குறை கொண்ட தேசிய விளையாட்டாளரும், பயிற்றுவிப்பாளருமான திரு கலைவாணனின் Facebook பதிவு ஒன்று இணையத்தில் வேகமாக பரவியதைத் தொடர்ந்து அமைச்சின் விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

தகுதி அடிப்படையிலான புதிய திட்டத்தின் கீழ், மருத்துவரீதியாக உடற்குறை கொண்டவர்களுக்கும், வாகனத்திலிருந்து இறங்கவோ, ஏறவோ கூடுதல் இடம் தேவைப்படுபவர்களுக்கும், உடற்குறையுடையோருக்கான கார்நிறுத்துமிடம் ஒதுக்கப்படும்.

உடற்குறையுடையோருக்கான கார் நிறுத்துமிடத் தேவை அதிகரித்துவருகிறது; இவ்வேளையில், பெரிய சக்கர நாற்காலிகள், நடமாட்டச் சாதனங்கள்  போன்றவற்றைப் பயன்படுத்துவோருக்கு மட்டுமே அத்தகைய இடங்கள் ஒதுக்கப்படும் என்று ஏற்கனவே அமைச்சு தெரிவித்திருந்தது.

புற்றுநோயால் கால்களை இழந்த விளையாட்டாளர் திரு கலைவாணன், அது குறித்து கவலை தெரிவித்தார். சக்கர நாற்காலிகள் போன்ற நடமாட்டச் சாதனங்களைப் பயன்படுத்தாமல், ஊன்று கோல்களைப் பயன்படுத்துவோர் இனி அத்தகைய கார்நிறுத்துமிடங்களைப் பயன்படுத்த முடியாமல் போகலாம் என்று அவர் கூறியிருந்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்