Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மின்சாரக் காரில் வேலைக்குச் செல்ல விருப்பமா?

சிங்கப்பூர்ச் சூழலில் அந்தக் கார்கள் திறன்மிக்க முறையில் செயல்படுவதை உறுதிசெய்வது சோதனைகளின் நோக்கம்.

வாசிப்புநேரம் -
மின்சாரக் காரில் வேலைக்குச் செல்ல விருப்பமா?

(படம்: சேனல் நியூஸ்ஏஷியா)

மின்சாரக் காரில் வேலைக்குச் செல்ல விருப்பமா?

சிங்கப்பூரின் முதல் மின்சாரக் கார் பகிர்வுச் சேவை இன்னும் இரண்டு நாட்களில் அறிமுகம் காணவிருக்கிறது.

அந்தச் சேவையை வழங்கும் Blue-SG நிறுவனம் சேவை தொடர்பான கருத்துக்களைத் திரட்ட தொழில்நுட்பரீதியான சோதனை முறையை இன்று தொடங்கியது.

(படம்: Calvin Hui)

முதல் ஒன்பது மின்னூட்ட நிலையங்களில், முழுமையான சோதனையை மேற்கொண்டது Blue-SG நிறுவனம்.

அந்த நிலையங்கள் தோபாயோ, ஜூரோங் ஈஸ்ட் போன்ற பொது வீடமைப்புப் பேட்டைகளோடு நகர மையம், அறிவியல் பூங்கா போன்ற இடங்களிலும் அமைந்துள்ளன.

சிங்கப்பூர்ச் சூழலில் அந்தக் கார்கள் திறன்மிக்க முறையில் செயல்படுவதை உறுதிசெய்வது சோதனைகளின் நோக்கம்.

தீவு முழுவதும் அமைக்கப்படவுள்ள 30 மின்னூட்ட நிலையங்களின் முதல் ஒன்பது நிலையங்கள் இவை.

மீதமுள்ள நிலையங்கள் இவ்வாண்டு இறுதிக்குள் திறக்கப்படும்.

2020ஆம் ஆண்டுக்குள் ஆயிரம் மின்சார வாகனங்களைச் சேவையில் ஈடுபடுத்தவும் ஈராயிரம் மின்னூட்ட நிலையங்களை அமைப்பதும் Blue-SG நிறுவனத்தின் நீண்டகால இலக்கு.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்