Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிறுமிக்கான மருத்துவப் பராமரிப்பில் குறையில்லை - KKH பெண்கள் சிறார் மருத்துவமனை

விசாரணை நடத்தியிருப்பதாகவும் பாதிக்கப்பட்டதாகக் கூறும் குடும்பத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் மருத்துவமனை தெரிவித்தது. 

வாசிப்புநேரம் -
சிறுமிக்கான மருத்துவப் பராமரிப்பில் குறையில்லை - KKH பெண்கள் சிறார் மருத்துவமனை

(படம்: ஃபேஸ்புக்கில் பரவிய காணொளியிலிருந்து எடுக்கப்பட்டது)

உடல் நலனில்லாத மகளை KKH பெண்கள் சிறார் மருத்துவமனை மருத்துவர் முன்னுரிமை கொடுத்து கவனிக்கவில்லை எனத் திருமதி திரிஷா ஆங்கும் அவரது கணவரும் ஃபேஸ்புக்கில் பதிவுசெய்திருந்தனர்.

உடன் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த காணொளியில் மயக்கநிலையில் இருக்கும் சிறுமிக்குத் தந்தை அவரச மருத்துவ உதவி வழங்கிக்கொண்டிருக்கிறார்.

இந்த மாதம் 13ஆம் தேதி இரவு வேளை திருமதி ஆங், தமது மகளை மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டுசென்றுள்ளார்.

அங்கு மூன்று மணி நேரத்துக்குப் பிறகு டாக்டர் பீட்டர் வோங் தமது மகளைப் பரிசோதித்ததாக அவர் சொன்னார்.

டாக்டர் வோங், சிறுமியின் நிலை மோசமாக இல்லை என்றும் உடனடி மருத்துவப் பராமரிப்பு தேவையில்லை என்றும் கூறியதாகத் திருமதி ஆங் ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தார்.

மேலும் சில மணி நேரம் அவர்கள் காத்திருக்கலாம் அல்லது வேறு இடத்துக்குச் சென்று மகளைச் சோதிக்கலாம் என மருத்துவர் கூறியதாகத் திருமதி ஆங் சொன்னார்.

மறுநாள் காலை சிறுமியின் நிலை மோசமானதால் அவசர மருத்துவ உதவி வாகனத்தில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.

எனினும் பிள்ளைக்குக் கொடுக்கப்பட்ட மருத்துவப் பராமரிப்பில் குறைபாடு ஏதும் இல்லை என KKH பெண்கள் சிறார் மருத்துவமனை கூறியிருக்கிறது.

விசாரணை நடத்தியிருப்பதாகவும் பாதிக்கப்பட்டதாய்க் கூறும் குடும்பத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் மருத்துவமனை தெரிவித்தது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்