Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் உணவு விழா..இந்த ஆண்டு என்ன புதுமை?

24 ஆவது முறையாக நடைபெறவுள்ளது சிங்கப்பூர் உணவு விழா. சிங்கப்பூர் உணவு வகைகளை மக்களுக்கு எடுத்துக்காட்டுவது இந்த ஆண்டு விழாவின் முக்கிய நோக்கம்.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் உணவு விழா..இந்த ஆண்டு என்ன புதுமை?

(படம்: பிரசன்னா கிருஷ்ணன்)

24 ஆவது முறையாக நடைபெறவுள்ளது சிங்கப்பூர் உணவு விழா. சிங்கப்பூர் உணவு வகைகளை மக்களுக்கு எடுத்துக்காட்டுவது இந்த ஆண்டு விழாவின் முக்கிய நோக்கம்.

உள்ளூர் சமையல் வல்லுநர்கள் பாரம்பரிய, நவீன உணவு வகைகளைச் சமைத்துப் படைக்கவிருக்கின்றனர்.

சிங்கப்பூரின் வளமான கலாசாரம், மரபுடைமை ஆகியவற்றைப் பறைசாற்றும் உணவு விழாவில் தனித்துவமிக்க பல்வேறு உணவு வகைகளை எதிர்பார்க்கலாம்.

விழா அடுத்த மாதம் 14ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெறும்.

இந்த ஆண்டு உணவு விழாவின் முன்னோட்ட நிகழ்ச்சிக்குச் சென்று வந்தார் எமது நிருபர் பிரசன்னா கிருஷ்ணன்.

உணவு விழா குறித்த மேல்விவரங்களை இன்றிரவு தமிழ்ச்செய்தியில் காணலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்