Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் இரு விடுதிகளுக்கு எச்சரிக்கை

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளுக்கு எச்சரிக்கை: சுகாதார, பாதுகாப்புக் குறைபாடு

வாசிப்புநேரம் -
வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் இரு விடுதிகளுக்கு எச்சரிக்கை

(மறுநாள் காலை உணவு, மதிய உணவு ஆகியவை முந்தைய நாள் இரவே பொட்டலம் போடப்பட்டுள்ளன என்பது நிலையம் நடத்திய சோதனையில் தெரியவந்தது. படம்: வெளிநாட்டு ஊழியர்கள் நிலையம்)

மூட்டைப்பூச்சிகள், கரப்பான்பூச்சிகள், அளவுக்கு அதிகமான படுக்கைகள், படுக்கைக்கு அருகில் கெட்டுப்போன உணவுகள்... கேலாங்கில் உள்ள இரு தங்கும் விடுதிகளைத் திடீர் சோதனை செய்த வெளிநாட்டு ஊழியர்கள் நிலையம் கண்டறிந்தவை இவை.

விடுதிகளின் சுகாதார, பாதுகாப்பு குறைபாடு தொடர்பில் நிலையம் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவிருக்கிறது. விடுதிகளை நிர்வகிக்கும் முதலாளிகளுக்கு எதிராய்க் கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி அதில் குறிப்பிடப்போவதாக நிலையத்தின் தலைவர் இயோ குவாட் குவாங் சொன்னார்.

நேற்று நள்ளிரவு தாண்டி சோதனை நடத்தப்பட்டதாகத் திரு இயோ கூறினார். வெளிநாட்டு ஊழியர்கள் தாங்கள் தங்கும் சூழ்நிலை, உணவு ஆகியவை குறித்துப் புகார் அளித்ததைத் தொடர்ந்து, சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.

பங்களாதேஷ் ஊழியர்கள் சிலர், சம்பள பாக்கியின் தொடர்பில் அளித்திருக்கும் புகார் குறித்தும் தீவிரமாக விசாரித்துவருவதாக நிலையம் சொன்னது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்