Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சூதாட்டக் கூடமாகப் பயன்படுத்தப்பட்ட கேலாங் வீட்டில் 15 பேர் கைது

கைதானவர்களில் குறைந்தது 4 பேர் சிங்கப்பூரில் கட்டுமான ஊழியர்களாகப் பணிபுரிந்ததாக அதிகாரிகள் கூறினர்.

வாசிப்புநேரம் -
சூதாட்டக் கூடமாகப் பயன்படுத்தப்பட்ட கேலாங் வீட்டில் 15 பேர் கைது

(படம்:Vanessa Paige Chelvan)

கேலாங் லோரோங் 30இல் இருந்த வீட்டில் நடந்த அதிரடிச் சோதனையில் 15 வெளிநாட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

30 வயதுக்கும் 51 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் ஒரு பெண்ணும் இருந்தார்.

(படம்: சிங்கப்பூர்க் காவல்துறை)

காவல்துறையும் குடிநுழைவுச் சோதனைச் சாவடி ஆணையமும் இணைந்து அந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

கைதானவர்களில் குறைந்தது 4 பேர் சிங்கப்பூரில் கட்டுமான ஊழியர்களாகப் பணிபுரிந்ததாக அதிகாரிகள் கூறினர்.

(படம்:Vanessa Paige Chelvan)

அந்த வீட்டில் அவர்கள் வாடகைக்கு இருந்ததாக நம்பப்படுகிறது.

வீட்டினைச் சூதாட்டக் கூடமாகச் சுமார் ஒரு மாதத்துக்கு அந்தச் சந்தேக நபர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

(படம்:Vanessa Paige Chelvan)

சுமார் 40 அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இரு கைதொலைபேசிகள், சிகிரெட் லைட்டர் போன்றவை அந்த அறையில் கண்டெடுக்கப்பட்டன.

இரண்டாயிரம் வெள்ளிக்கு மேலான ரொக்கமும் சூதாட்ட விளையாட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

(படம்:Vanessa Paige Chelvan)

விசாரணை தொடர்கிறது. 

குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூவாண்டுவரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

5,000 வெள்ளியிலிருந்து 50,000 வெள்ளிவரையில் அபராதம் விதிக்கப்படலாம்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்