Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

GST பற்றுச்சீட்டுகள், மெடிசேவ் நிரப்புத் தொகை-1.57 மில்லியன் சிங்கப்பூரர்களுக்கு...

சுமார் 1.57 மில்லியன் சிங்கப்பூரர்களுக்கு பொருள் சேவை வரிப் பற்றுச்சீட்டுகளும், மெடிசேவ் நிரப்புத் தொகையும் வழங்கப்படவிருக்கிறது. நிதியமைச்சு அதனைத் தெரிவித்தது.

வாசிப்புநேரம் -
GST பற்றுச்சீட்டுகள், மெடிசேவ் நிரப்புத் தொகை-1.57 மில்லியன் சிங்கப்பூரர்களுக்கு...

(படம்: AFP/Roslan Rahman)

சுமார் 1.57 மில்லியன் சிங்கப்பூரர்களுக்கு பொருள் சேவை வரிப் பற்றுச்சீட்டுகளும், மெடிசேவ் நிரப்புத் தொகையும் வழங்கப்படவிருக்கிறது. நிதியமைச்சு அதனைத் தெரிவித்தது.

சுமார் 1.37 மில்லியன் சிங்கப்பூரர்கள் 500 வெள்ளி வரையிலான ரொக்கப் பற்றுச்சீட்டுகளைப் பெறவிருக்கின்றனர். அதில் 300 வெள்ளி வரையிலான தொகை ஆகஸ்ட் மாதமும், பின் ஒரு குறிப்பிட்ட தொகை நவம்பரிலும் வழங்கப்படும். அதன் மூலம் சுமார் 680 மில்லியன் வெள்ளியை அரசாங்கம் வழங்கும் என்று அமைச்சு சொன்னது.

மெடிசேவ் நிரப்புத் தொகையைப் பொறுத்தவரை, 65 வயதுக்கு மேற்பட்ட சுமார் 450,000 சிங்கப்பூரர்கள் பலனடையவிருக்கின்றனர். 450 வெள்ளி வரையிலான தொகை, ஆகஸ்ட் மாதம் அவர்களது மெடிசேவ் கணக்கில் நிரப்பப்படும். அதன் மூலம், அரசாங்கம் மொத்தம் 130 மில்லியன் வெள்ளியை வழங்கவிருக்கிறது.

1959, டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பு பிறந்து, முன்னோடித் தலைமுறையினருக்கான அனுகூலங்களைப் பெறாத சிங்கப்பூரர்களுக்கும் நிரப்புத் தொகை அளிக்கப்போவதாகத் தெரிவிக்கப்பட்டது. அவர்களது மெடிசேவ் கணக்கில் இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும், 200 வெள்ளிவரை நிரப்பப்படும்.
அதன் மூலம் சுமார் 520,000 சிங்கப்பூரர்களுக்கு 95 மில்லியன் வெள்ளியை அரசாங்கம் வழங்கவிருக்கிறது.

முன்னோடித் தலைமுறையினர், அடுத்த மாதம் 200 வெள்ளி முதல் 800 வெள்ளியிலான மெடிசேவ் நிரப்புத் தொகையைப் பெறுவர். 




மொத்தத்தொகை ($மி)

தனிநபர்
GST பற்றுச்சீட்டு 680 $500 வரை
மெடிசேவ் நிரப்புத்தொகை 130 $450 வரை
முன்னோடித் தலைமுறை அங்கூலம் பெறாத சிங்கப்பூரர்களுக்கு 95 $200 வரை


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்