Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மரணத்தின் விளிம்பில் ஆடவர் - காப்பாற்றிய அதிகாரிகள்

அடுக்குமாடி புளோக்கின் நான்காவது மாடியிலுள்ள சன்னலோரத்தில் அமர்ந்திருந்த 29 வயது ஆடவரைச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர் காப்பாற்றியுள்ளனர்.

வாசிப்புநேரம் -

அடுக்குமாடி புளோக்கின் நான்காவது மாடியிலுள்ள சன்னலோரத்தில் அமர்ந்திருந்த 29 வயது ஆடவரைச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர் காப்பாற்றியுள்ளனர்.

சீமெய் ரோடு புளோக் 161இல் பிற்பகல் 12.20 மணிக்கு ஆடவர் சன்னலோரத்தில் அமர்ந்தவண்ணம் காணப்பட்டார்.

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்பு அதிகாரிகள், மீட்பு வலையை புளோக்கின் ஓரத்தில் விரித்துக்கொண்டிருந்ததை மீடியாகார்ப் செய்திப் பிரிவுக்கு குமாரி டான் என்ற நேயர் அனுப்பிய காணொளி காட்டுகிறது. கூரையிலிருந்து 3 அதிகாரிகள் இறங்கி ஆடவரைப் பிடித்தனர். இதர அதிகாரிகள் அந்த ஆடவரை அடுக்குமாடி வீட்டுக்குள் இழுத்தனர்.

தற்கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டின் பேரில் ஆடவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். காவல்துறை அதிகாரிகளின் விசாரணை தொடர்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்