Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உள்ளூர் வர்த்தகங்கள் வளர மேலும் அதிகமான நிறுவனங்கள் காலதுக்கு ஏற்ப செயல்பட வேண்டும்

ஒவ்வொரு நிர்வாகியும் பணியில் சேரும் அனைவரும் உடனே வேலையைத் தொடங்கி விடுவர் என்று எதிர்பார்க்கக்கூடும். 

வாசிப்புநேரம் -
உள்ளூர் வர்த்தகங்கள் வளர மேலும் அதிகமான நிறுவனங்கள் காலதுக்கு ஏற்ப செயல்பட வேண்டும்

(படம்: Today)

சிங்கப்பூரின் வர்த்தகங்கள் தொடர்ந்து வளர்ச்சியடைய, இன்னும் அதிகமான நிறுவனங்கள் உள்நாட்டு நிபுணர்கள், நிர்வாகிகள், மேலாளர்கள், தொழில்நுட்பர்கள் ஆகியோர் காலத்துக்கு ஏற்ப செயல்பட உதவும் வகையில், நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.

சிங்கப்பூர் மனிதவள உச்சநிலை ஆண்டுக் கூட்டத்தில் மனிதவளத் துணையமைச்சர் ஜோசஃபின் தியோ அவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒவ்வொரு நிர்வாகியும் பணியில் சேரும் அனைவரும் உடனே வேலையைத் தொடங்கி விடுவர் என்று எதிர்பார்க்கக்கூடும்.

அது போட்டி நிறுவனங்களிடமிருந்து சம்பளத்தை உயர்த்தி ஊழியர்களைத் தட்டிப் பறிக்கும் முயற்சியில் போய் முடியும். 

திறனாளர் எண்ணிக்கையும் தேவைக்கேற்ப விரைவாக உயராமல் போகலாம்.

திறனாளர்களை அவ்வாறு பெறும்போது அதற்குரிய செலவும் அதிகரிக்கும்.

அதே வேளையில் அனுபவமிக்க உள்ளூர் நிபுணர்கள், நிர்வாகிகள், மேலாளர்கள், தொழில்நுட்பர்கள் ஆகியோர் தொடர்ந்து வேலையின்மையால் பாதிக்கப்படலாம்.

அவர்கள் தகுதிக்குக் குறைவான வேலையைச் செய்யும் சூழலும் உருவாகலாம் என்று திருமதி ஜோசஃபின் தியோ குறிப்பிட்டார்.

அது வர்த்தகங்களுக்கும் சமூகத்துக்கும் இழப்பாக அமையும் என்றார் அவர்.

இன்றைய உச்சநிலைக் கூட்டத்தில் ஆசிய மனிதவள விருதை அவர் வழங்கினார்.

ஊழியர்களின் நிபுணத்துவ மேம்பாட்டையும் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் வர்த்தக அமைப்புகளுக்கு அந்த விருது வழங்கப்படுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்