Images
  • fire at katong

காத்தோங் கடைத்தொகுதியில் தீ (காணொளி)

I12காத்தோங் கடைத்தொகுதியில் நேற்றிரவு தீ மூண்டது. ஆனால் அதில் ஒருவருக்கும் காயமில்லை.

கடைத்தொகுதியின் முதல் தளத்தில் தீப்பற்றியதைத் தொடர்ந்து, அங்கிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

சுமார் 9.45 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் அங்கு  சென்று சேர்ந்தனர்.

அங்கு புகை வாடை வீசியதாகச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் சேனல் நியூஸ் ஏஷியாவிடம் தெரிவித்தார்.

இரவு 11.15 மணி அளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும், அதில் ஒருவருக்கும் காயமில்லை என்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை குறிப்பிட்டது.



 

உங்கள் கருத்து

Top