Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இல்லத்தை உடனடியாக இடிக்கவேண்டும் என்று அரசாங்கத்திடம் நாங்கள் சொல்லவில்லை: இந்திராணி ராஜாவுக்கு லீ சியென் யாங் பதில்

38 ஆக்ஸ்லி ரோடு இல்லத்தை உடனடியாக இடிக்கவேண்டும் என்று அரசாங்கத்திடம் நாங்கள் சொல்லவில்லை என்று திரு லீ சியென் யாங் கூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
இல்லத்தை உடனடியாக இடிக்கவேண்டும் என்று அரசாங்கத்திடம் நாங்கள் சொல்லவில்லை: இந்திராணி ராஜாவுக்கு லீ சியென் யாங் பதில்

(கோப்புப் படம்: Today)

38 ஆக்ஸ்லி ரோடு இல்லத்தை உடனடியாக இடிக்கவேண்டும் என்று அரசாங்கத்திடம் நாங்கள் சொல்லவில்லை என்று திரு லீ சியென் யாங் கூறியிருக்கிறார்.

ஆக்ஸ்லி ரோடு இல்லம் தொடர்பாக உடனடியாக முடிவெடுக்கவேண்டும் என்று திரு லீ சியென் யாங் ஏன் வற்புறுத்துகிறார் என்று நிதி, சட்டத் துறைகளுக்கான மூத்த துணையமைச்சர் குமாரி இந்திராணி ராஜா கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்குத் திரு லீ சியென் யாங் பதிலளித்தார். தமது சகோதரி டாக்டர் லீ வேய் லிங்கின் காலத்துக்குப் பிறகே இல்லத்தை இடிக்கவேண்டும் என்று அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டதாக அவர் சொன்னார்.

மறைந்த முதல் பிரதமர் திரு லீ குவான் இயூவின் ஆக்ஸ்லி ரோடு இல்லத்தை என்ன செய்வது என்பதன் தொடர்பில் பிரதமர் லீ சியென் லூங்குக்கும் அவரது உடன்பிறப்புகளுக்கும் இடையில் சர்ச்சை தொடர்கிறது.

தமது மறைவுக்குப் பின்னர் அல்லது டாக்டர் லீ வேய் லிங் அந்த இல்லத்திலிருந்து வேறு இடத்திற்குச் சென்ற பிறகு இல்லம் இடிக்கப்படவேண்டும் என்று மறைந்த திரு லீ விருப்பம் தெரிவித்திருந்தார்.

ஆனால் அதை நிறைவேற்றுவதில் தயக்கம் உள்ளது என்றும் பிரதமர் லீ அந்த விவகாரத்தில் தமது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார் என்றும் திரு லீ சியென் யாங், டாக்டர் லீ வேய் லிங் இருவரும் குறைகூறினர்.

அந்தக் குறைகூறல்களைப் பிரதமர் மறுத்தார்.

இல்லம் குறித்து முடிவெடுக்க அமைச்சுநிலைக்குழு ஒன்றை அமைப்பதன் தொடர்பிலும் இருதரப்புக்கும் இடையில் சர்ச்சை எழுந்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்