Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

காவல்துறை அதிகாரியாக வேடமிட்ட மலேசிய ஆடவர் கைது

காவல்துறை அதிகாரி போல வேடமிட்டு பெண் ஒருவரிடம் 270,000 வெள்ளியை ஏமாற்றிய மோசடியின் தொடர்பில் 23வயது மலேசிய ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

வாசிப்புநேரம் -
காவல்துறை அதிகாரியாக வேடமிட்ட மலேசிய ஆடவர் கைது

படம்: சிங்கப்பூர் காவல்துறை

காவல்துறை அதிகாரி போல வேடமிட்டு பெண் ஒருவரிடம் 270,000 வெள்ளியை ஏமாற்றிய மோசடியின் தொடர்பில் 23வயது மலேசிய ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை அதிகாரி எனத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட நபரிடமிருந்து ஜூலை 11ஆம் தேதி, 29வயது பெண்ணுக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய குற்றத்திற்காக விசாரணை நடத்தப்படுவதாக அந்த நபர் பெண்ணிடம் கூறினார். அவர் பெண்ணின் சொந்த விவரங்கள் பற்றியும் கேட்டார்.

அந்தப் பெண்ணிடம் இணையத்தள முகவரி ஒன்று வழங்கப்பட்டது. அதில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய சம்பவத்தில் ஈடுபட்டிருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜூலை 12,13 ஆகிய தேதிகளில், அந்தப் பெண், 270,000 வெள்ளியை அடையாளம் தெரியாத சில ஆடவர்களிடம் கொடுத்தார். அதன் மூலம் தன்னை கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய சம்பவத்திலிருந்து விடுவித்துக்கொள்ள முடியும் என அவர் நம்பினார்.

காவல்துறையினர் நேற்று வெளியிட்ட செய்தி அறிக்கையில் அந்தத் தகவல்கள் இடம்பெற்றிருந்தன.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த ஆடவருக்கு 10 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.    

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்