Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பிரபலமடைந்துவரும் இணையவழி மருத்துவ ஆலோசனைச் சேவை

இணையம்வழி வழங்கப்படும் மருத்துவ ஆலோசனைச் சேவைகள் நோயாளிகளிடையே பிரபலமடைந்துவருகின்றன.

வாசிப்புநேரம் -
பிரபலமடைந்துவரும் இணையவழி மருத்துவ ஆலோசனைச் சேவை

(கோப்புப்படம்: Today)

இணையம்வழி வழங்கப்படும் மருத்துவ ஆலோசனைச் சேவைகள் நோயாளிகளிடையே பிரபலமடைந்துவருகின்றன.

அதன் மூலம் நோயாளிகளின் நிலையை நேரடித் தொடர்பின்றி மருத்துவர்கள் இணையச் சேவைகள் வழி கண்காணிக்க முடிகிறது.

அதில் சில நடைமுறைச் சிக்கல்களும், சட்டப் பிரச்சினைகளும் இருந்தாலும் கூட, அண்மை நாட்களில் அதற்கு சிறந்த வரவேற்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் மருத்துவமனை அறிமுகம் செய்யும் புதிய திட்டங்களில் இருந்து சுகாதாரப் பராமரிப்புத் துறை நிபுணர்களுக்கு முன்பதிவு செய்வதுவரை, இணையம் வழிச் சேவைகள் பயன்படுத்தப்படுகின்றன.

நேற்று (23 ஜூலை) சிங்கப்பூர் மலேசியா இடையில் ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சுகதாரப் பராமரிப்புத் துறையின் எதிர்காலம் தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது. அதில் புதிய மேம்பாடுகள் குறித்த விவரங்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

சிங்கப்பூரில் தற்போது அந்தத் திட்டத்தின் வழி சுமார் 3,000 நோயாளிகள் பயன்பெறுகின்றனர்.

இருதயப் பிரச்சினை உள்ள நோயாளிகள், இன்சுலின் எடுக்கத் தொடங்கியிருக்கும் நோயாளிகள் ஆகியோருக்கு திட்டம் உதவியாக இருப்பதாகக் கூறப்படுகிறது 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்