Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

விசாரணையை எதிர்நோக்கும் மருத்துவருக்கு நிபந்தனைகள்

மானபங்கக் குற்றச்சாட்டை எதிர்நோக்கும் மருத்துவருக்கு நிபந்தனைகள்

வாசிப்புநேரம் -
விசாரணையை எதிர்நோக்கும் மருத்துவருக்கு நிபந்தனைகள்

படம்: AFP/Joe Raedle

சிங்கப்பூரில், மானபங்கக் குற்றஞ்சாட்டப்பட்ட மருத்துவர் ஒருவர், தமது மருத்துவத் தொழிலைத் தொடர்ந்து மேற்கொள்ளவேண்டுமெனில், சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யவேண்டும் என்று சிங்கப்பூர் மருத்துவ மன்றம் தெரிவித்துள்ளது.

2015-ஆம் ஆண்டு, Wee's Clinic and Surgery எனும் தனியார் மருந்தகத்தில், டாக்டர் வீ தியோங் பூ என்னும் மருத்துவர் பெண் நோயாளி ஒருவரை மானபங்கப்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்.

அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் இன்னும் உறுதிசெய்யப்படாத நிலையில், அவர் மருத்துவத் தொழிலைத் தொடர தடை விதிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தின் அடிப்படையில், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் உறுதிசெய்யப்படும் வரையில், அவர் நிரபராதியாகவே நடத்தப்படுவார்.

எனினும், சுமத்தப்பட்ட குற்றத்தின் தன்மையையும், பொதுமக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, டாக்டர் வீ தமது மரு த்துவத் தொழிலைத் தொடர்வதற்கு, சிங்கப்பூர் மருத்துவ மன்றம் சில நிபந்தனைகளை விதித்துள்ளது.

அதன்படி, அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் விசாரணை முடியும் வரை, அவர் பெண் நோயாளிகளுக்கு பெண் மருத்துவர் ஒருவரின் பார்வையில் மட்டுமே சிகிச்சை அளிக்கவேண்டும் என்று மன்றம் உத்தரவிட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்