Images

தேசிய தின அணிவகுப்புக்கான நுழைவுச்சீட்டு வேண்டுமா?

இந்த ஆண்டு தேசிய தின அணிவகுப்புக்கான கருப்பொருள், பாடல் ஆகிய விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டன.

தேசிய தின அணிவகுப்பை நேரில் காண ஆவலுடன் காத்திருப்போர் நுழைவுச்சீட்டுகளுக்கு வரும் செவ்வாய்க்கிழமை முதல் விண்ணப்பம் செய்யலாம்.

--சிங்கப்பூர் குடிமக்களும், நிரந்தரவாசிகளும் விண்ணப்பம் செய்யலாம்.

--ஜூலை 22, ஜூலை 29 நடைபெறும் முன்னோட்ட நிகழ்ச்சி அல்லது
ஆகஸ்ட் 9 நடைபெறும் தேசிய தின அணிவகுப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

--2, 4 அல்லது 6 நுழைவுக்சீட்டுகளுக்கு விண்ணப்பம் செய்யலாம்.
--குறைவான நுழைவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பம் செய்தால், கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம்.

--நுழைவுச்சீட்டு கிடைத்துவிட்டால், அது பற்றிய விவரங்கள் ஜூன் 26 முதல் ஜூலை 3ஆம் தேதிக்குள் தெரிவிக்கப்படும்.

--குறுஞ்செய்தி, இணையத்தளம், SAM, AXS இயந்திரங்கள் வழி விண்ணப்பிக்கலாம்.

--அவர்கள் ஜூலை 7இலிருந்து 9ஆம் தேதிக்குள், ஜூலை 14இலிருந்து 16க்குள் நுழைவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

--காலை 10 மணிமுதல், இரவு 9 மணிக்குள் சிங்கப்பூர் தேசியக் கலைக்கூடத்தில் நுழைவுச்சீட்டுகளைப் பெறலாம்.

--ஒரு நுழைவுச்சீட்டைப் பயன்படுத்தி, ஒருவர் மட்டுமே செல்லமுடியும். அது பிள்ளைகளுக்கும் பொருந்தும்.

--குறுஞ்செய்தியை:
<NRIC No> SPACE <Preview1/Preview2/NDP> SPACE <No of Tickets>
என்ற வடிவத்தில் 8240 0050 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.  

உங்கள் கருத்து

Top