Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பயங்கரவாத மிரட்டல்களை முறியடிக்க ஆர்ச்சர்ட் பகுதியில் புதிய துரித நடவடிக்கைக் காவல்துறைக் குழுக்கள்

பயங்கரவாத மிரட்டல்களை எதிர்கொள்ளும் சிங்கப்பூரின் முயற்சிகளுக்கு புதிய துரித நடவடிக்கைக் காவல்துறைக் குழுக்கள் உதவி வருகின்றன.  

வாசிப்புநேரம் -
பயங்கரவாத மிரட்டல்களை முறியடிக்க ஆர்ச்சர்ட் பகுதியில் புதிய துரித நடவடிக்கைக் காவல்துறைக் குழுக்கள்

படம்: Najeer Yusof/TODAY

புதிய துரித நடவடிக்கைக் காவல்துறைக் குழுக்கள், பயங்கரவாத மிரட்டல்களை எதிர்கொள்ளும் சிங்கப்பூரின் முயற்சிகளுக்கு உதவி வருகின்றன.  

ஆர்ச்சர்ட் ரோடு கடைத்தொகுதி வட்டாரம், மரினா பே என மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளில் அக்குழுக்கள் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுள்ளன.

இம்மாதத்தின் தொடக்கத்திலிருந்து குழுவினர் அப்பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒவ்வொரு குழுவிலும் 4 பேர் இருப்பர். முழுநேர தேசியச் சேவையாளர்களுடன் காவல்துறை அதிகாரி ஒருவரும் அக்குழுவில் பணியாற்றுவார்.

மாறிவரும் சூழலில் அச்சுறுத்தல்களைத் துரிதமாக எதிர்கொள்ள அந்நடவடிக்கை வழிவகுக்கும் என்று கூறப்பட்டது.

ஒரு மிரட்டல் உருவாகும் போது பேச்சு நடத்துவதற்கு அதிகாரிகள் அனுப்பப்படும் சூழ்நிலை மாறிவிட்டதாகவும் ஒரு சில நிமிடங்களிலேயே நிலைமை மோசமடையக்கூடும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்