Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

படித்துக்கொண்டே வேலை பார்க்கும் வாய்ப்புகள்: கைகொடுக்கும் வருங்காலத் திறன் வளர்ச்சித் திட்டம்

வேலை அனுபவத்தோடு நிறுவனங்கள் எதிர்கொள்ளக்கூடிய மனிதவளப் பிரச்சினையைச் சமாளிக்கவும் இது உதவலாம் என்றார் கல்விக்கான மூத்த துணையமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி.

வாசிப்புநேரம் -
படித்துக்கொண்டே வேலை பார்க்கும் வாய்ப்புகள்: கைகொடுக்கும் வருங்காலத் திறன் வளர்ச்சித் திட்டம்

(படம்:SkillsFuture Singapore)

சிங்கப்பூரில், வருங்காலத் திறன் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் உயர்கல்வி மாணவர்களுக்குக் கூடுதல் வேலை அனுபவம் வழங்கப்படவுள்ளது.

படித்துக்கொண்டே வேலை பார்க்கும் வாய்ப்புகளை வழங்கும் முயற்சியில் கூடுதல் பாடத் திட்டங்கள் சேர்க்கப்படவுள்ளன.

மாணவர்கள் அவற்றுக்கு விண்ணப்பிக்க அடுத்த ஆண்டு இணையவாசல் ஒன்றும் தொடங்கப்படவுள்ளது.

தொழில்துறையில் நுழையவேண்டும் என்றெண்ணும் மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருக்கலாம்.

அத்தகையோருக்கு உதவும் நோக்கத்துடன் முதன்முறையாக நடத்தப்பட்டது வருங்காலத் திறன் வளர்ச்சித் திட்டத்தின் Earn and Learn எனும் நிகழ்ச்சி.

மாணவர்களுக்குத் தொழில்துறை அனுபவத்தை வழங்க சில புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள நிறுவனம் ஒன்றில் 9இலிருந்து 12 மாதங்கள் வேலை பார்க்க வகைசெய்யும் திட்டம் அவற்றில் ஒன்று.

வேலை அனுபவத்தோடு நிறுவனங்கள் எதிர்கொள்ளக்கூடிய மனிதவளப் பிரச்சினையைச் சமாளிக்கவும் இது உதவலாம் என்றார் கல்விக்கான மூத்த துணையமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி.

2015 மார்ச் மாதம் தொடங்கப்பட்ட திட்டத்தில் இதுவரை 1,200க்கும் அதிகமான புதிய பட்டதாரிகள் சேர்ந்துள்ளனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்