Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புதிய துணைக்கோளத் தொழில்நுட்பத்தால் மேம்படவிருக்கும் தேடல் மீட்புப் பணிகள்

சிங்கப்பூரின் புதிய துணைக்கோளத் தொழில்நுட்பம்

வாசிப்புநேரம் -
புதிய துணைக்கோளத் தொழில்நுட்பத்தால் மேம்படவிருக்கும் தேடல் மீட்புப் பணிகள்

(படம்: Channel NewsAsia)

சிங்கப்பூர், புதிய துணைக்கோளத் தொழில்நுட்பத்துடன் கடல், ஆகாயம்வழி நடைபெறும் தேடல், மீட்பு நடவடிக்கைகளுக்கான ஆற்றல்களை வலுப்படுத்தியுள்ளது.

பூமியின் சுற்றுப்பாதையில் தேடல், மீட்புப் பணிகளை மேற்கொள்ள உதவும் புதிய செயல்முறையில் முதலீடு செய்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையமும், கடல்துறை, துறைமுக ஆணையமும் அறிக்கை வெளியிட்டன.

நிலத்திலும் விண்வெளியிலும் துணைக்கோளங்களைப் பயன்படுத்துவதற்குப் புதிய தொழில்நுட்பம் வகைசெய்கிறது.

விமானம், கப்பல் போன்றவற்றிலிருந்து கொடுக்கப்படும் அவசரகாலச் சமிக்ஞைகளைப் புதிய முறையின் மூலம் கண்டறியலாம்.
8 புள்ளி 4 மில்லியன் வெள்ளி செலவில் புதிய முறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
தற்போது பயன்படுத்தப்படும் முறையை விட வேகமாகவும் துல்லியமாகவும் அவசரகால அழைப்பு வரும் இடத்தைக் கண்டுபிடிக்க அது உதவும் எனக் கூறப்பட்டது.
அடுத்த ஆண்டு புதிய துணைக்கோளத் தொழில்நுட்ப முறை முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்