Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

NTUC பேரங்காடியின் குழந்தைகளுக்கான புதிய பால் மாவு

NTUC FairPrice பேரங்காடி, குழந்தைகளுக்கான புதிய பால் மாவு வகையை அறிமுகம் செய்திருக்கிறது.

வாசிப்புநேரம் -
NTUC பேரங்காடியின் குழந்தைகளுக்கான புதிய பால் மாவு

(படம்: Valerie Koh)

NTUC FairPrice பேரங்காடி, குழந்தைகளுக்கான புதிய பால்-மாவு வகையை அறிமுகம் செய்திருக்கிறது.

900 கிராம் பால் மாவு, 27 வெள்ளியில் இருந்து, 29 வெள்ளி வரை விற்கப்படுகிறது.

குழந்தைகளுக்கான பால் மாவு விலை அதிகரித்து வருவது பற்றிய வாடிக்கையாளர்களின் கவலைகளைத் தணிக்கும் நோக்கில் புதிய பால் மாவு வகையை அறிமுகம் செய்திருப்பதாக NTUC FairPrice கூறியது.

ஆஸ்திரேலியாவில் இருந்து அந்த FairPrice Gold பால் மாவு தருவிக்கப்படுகிறது.

சிங்கப்பூரில் இவ்வாண்டு அறிமுகமாகியிருக்கும் குழந்தைகளுக்கான நாலாவது பால் மாவு வகை அது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்