Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஆக்ஸ்லி ரோடு இல்லத்தின் தொடர்பில், ரகசியக் குழு அமைக்கப்பட்டது ஏன்? -லீ சியென் யாங்

ஆக்ஸ்லி ரோடு இல்லத்தின் தொடர்பில், 2016 ஆம் ஆண்டு ரகசியக் குழு அமைக்கப்பட்டது ஏன் என்று திரு லீ சியென் யாங் தமது Facebook பக்கத்தில் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -

ஆக்ஸ்லி ரோடு இல்லத்தின் தொடர்பில், 2016 ஆம் ஆண்டு ரகசியக் குழு அமைக்கப்பட்டது ஏன் என்று திரு லீ சியென் யாங் தமது Facebook பக்கத்தில் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மேலும் அந்தக் குழு தமது தந்தையின் உயில் குறித்துப் பிரதமர் லீ கூறிய கருத்தைத் திரும்பத் திரும்பச் சொல்வதில் மட்டுமே கவனம் செலுத்தியது என்றார் அவர்.

குழு அமைக்கப்படுவதற்குமுன் தாமும் தமது சகோதரியும் துணைப் பிரதமர் திரு தியோ சீ ஹியெனிடம் கோரிக்கை ஒன்றை விடுத்ததாகச் சொன்னார் திரு லீ சியென் யாங். டாக்டர் லீ வேய் லிங், இல்லத்தை விட்டு வெளியேறிய பிறகு அதனை இடித்துவிட்டு அங்கு ஒரு நினைவிடத் தோட்டம் அமைக்கலாம் என்ற யோசனையைத் தாம் முன்வைத்ததாக அவர் சொன்னார்.

திரு தியோ அதற்குத் தயக்கம் காட்டினார் என்றும் அது குறித்து மேலும் கலந்துபேசவில்லை என்றும் அவர் சொன்னார். திரு லீ சியென் லூங்கும் அந்த யோசனையை நிராகரித்ததாகத் திரு லீ சியென் யாங் குறிப்பிட்டார்.

இல்லத்தின் தொடர்பில் அமைக்கப்பட்ட ரகசியக் குழு வெளிப்படையாகக் கலந்துபேசியதைப் போல் குமாரி இந்திராணி பாசாங்கு செய்கிறார்; ஆனால் உண்மையை யாராலும் மறைக்கமுடியாது என்று திரு லீ சியென் யாங் கூறினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்