Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியிருப்பாளர்களுடன் தொடர்பை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் - பிரதமர் லீ

சிக்கலும் நிச்சயமற்ற தன்மையும் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், ஆளும் மக்கள் செயல் கட்சி மக்களுடன் தொடர்பில் இருக்கவேண்டும் என்று பிரதமர் லீ சியென் லூங் வலியுறுத்தியுள்ளார்.

வாசிப்புநேரம் -
நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியிருப்பாளர்களுடன் தொடர்பை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் - பிரதமர் லீ

படம்: Justin Ong

சிக்கலும் நிச்சயமற்ற தன்மையும் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், ஆளும் மக்கள் செயல் கட்சி மக்களுடன் தொடர்பில் இருக்கவேண்டும் என்று பிரதமர் லீ சியென் லூங் வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் செயல் கட்சியின் விருது, மாநாட்டில் உரையாற்றியபோது அவர் அந்த வேண்டுகோளை முன் வைத்தார். மக்கள் செயல் கட்சியின் தலைமைச் செயலாளரான திரு லீ, நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி உறுப்பினர்களும் தங்கள் குடியிருப்பாளர்களுடனான தொடர்பை அதிகரித்துக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.  

மக்களின் பயணத்தில் மக்கள் செயல் கட்சியும் இணைந்திருக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் அவர்கள் செயல்படவேண்டும் என்று திரு லீ கேட்டுக்கொண்டார்.

மக்கள், அரசாங்கத்தின் கொள்கைகளைப் புரிந்துகொண்டு அவற்றுக்கு ஆதரவளிக்கும் வண்ணம் செயல்படவேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

மக்கள் நலனுக்கு முன்னுரிமை தரவேண்டிய பொறுப்பு, மக்கள் செயல் கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் இருப்பதாகக் கூறினார் அவர்.

இன்னும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில், அடுத்த பொதுத் தேர்தல் நடைபெறக்கூடும் என்ற நிலையில், மக்கள் செயல் கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அயராது உழைக்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்