Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் செலவினத் தேவைகள் கூடுவதால், வரிகள் அதிகரிப்பதைத் தவிர்க்கமுடியாது - பிரதமர் லீ

அடுத்த ஆண்டின் வரவு செலவுத் திட்டக் கூட்டத்திற்குப் பிறகு நாடாளுமன்றம் நடுத்தவணை விடுப்பெடுத்துக் கொண்டு, ஒரு மாதத்திற்குப் பிறகு மீண்டும் செயல்படத் தொடங்கும் என்று பிரதமர் லீ இன்று அறிவித்தார். 

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் செலவினத் தேவைகள் கூடுவதால், வரிகள் அதிகரிப்பதைத் தவிர்க்கமுடியாது - பிரதமர் லீ

(படம்: Justin Ong)

சிங்கப்பூரின் செலவினத் தேவைகள் கூடுவதால், வரிகள்
உயர்த்தப்படுவதைத் தவிர்க்கமுடியாது என்று பிரதமர் லீ சியென் லூங் கூறியிருக்கிறார்.

மக்கள் செயல் கட்சியின் ஆண்டு மாநாட்டுக் கூட்டத்தில் அவர் பல முக்கிய விவகாரங்கள் குறித்துப் பேசினார்.

அடுத்த ஆண்டின் வரவு செலவுத் திட்டக் கூட்டத்திற்குப் பிறகு நாடாளுமன்றம் நடுத்தவணை விடுப்பெடுத்துக் கொண்டு, ஒரு மாதத்திற்குப் பிறகு மீண்டும் செயல்படத் தொடங்கும் என்று பிரதமர் லீ இன்று அறிவித்தார்.

பொருளியல் வளர்ச்சி, இந்த ஆண்டு முன்னுரைக்கப்பட்ட 3 விழுக்காட்டைத் தாண்டும் என்று தாம் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.

மக்கள் செயல் கட்சி ஆற்ற வேண்டிய பணிகள் பற்றியும் பிரதமர் பேசினார்.

சிங்கப்பூரர்களின் வலுவான நம்பிக்கையைப் பெற்ற கட்சியாய் திகழ்வதற்காக மக்கள் செயல் கட்சி கடந்த 60 ஆண்டுகளில் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கி இருப்பதைப் பிரதமர் சுட்டியுள்ளார்.

தேசியச் சேவை, பொருள் சேவை வரி போன்ற கடினமான
கொள்கைகளை ஆக்ககரமாகச் செயல்படுத்தியதன் மூலம் சிங்கப்பூரர்களின் நம்பிக்கையைப் பெற முடிந்ததாகப் பிரதமர் கூறினார்.

சிங்கப்பூரர்கள் கேட்க வேண்டியவற்றை மட்டும் அவர்களுக்குத் தெரியப்படுத்தாமல் அனைத்துத் தகவல்களையும் வெளிப்படையாகத் தெரிவிப்பதாகத் திரு. லீ கூறினார்.

மக்கள் செயல் கட்சி வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடந்துகொள்வதால் அது மக்களுக்கு வழங்கிவரும் செய்திகளும் வாக்குறுதிகளும் உண்மையானவை என்றார் அவர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்