Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பிரதமருக்கும், துணைப்பிரதமருக்கும் மிரட்டல் கடிதம் - விசாரணை

பிரதமருக்கும், துணைப்பிரதமருக்கும் விடுக்கப்பட்ட மிரட்டல் கடிதம்  குறித்து விசாரணை

வாசிப்புநேரம் -
பிரதமருக்கும், துணைப்பிரதமருக்கும் மிரட்டல் கடிதம் - விசாரணை

(படம்: Today)

பிரதமர் லீ சியென் லூங், துணைப்பிரதமர் தர்மன் சண்முகரத்தினம் உள்ளிட்ட அரசாங்கத் தலைவர்களுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் கடிதம் குறித்துப் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

அது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாகப் போலீசார் தெரிவித்தனர். விசாரணை நடைபெற்றுவருவதால் அது குறித்து மேல்விவரம் தர இயலாது என்று அவர்கள் தெரிவித்தனர். 

பிரதமர் லீ சியென் லூங்குக்கும் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விடுக்கப்பட்ட அந்த கையெழுத்துக் கடிதத்தின் நகல் ஒன்று "டுடே" நாளிதழுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

சுங்காய் ரோடு பழைய பொருட்களுக்கான சந்தை வேறு இடத்துக்கு மாற்றப்படுவதைக் கடிதம் கடுமையாகச் சாடியிருந்தது.

கடிதத்தில் "கோ எங் கூன்" என்று சுங்காய் ரோடு சந்தை வர்த்தகர்கள் சங்கத் தலைவரின் பெயரில் கையெழுத்திடப்பட்டிருந்தது.

அது அவரே அனுப்பியதா அல்லது அவரது அடையாளம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்