Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மின்னியல் துறையில் 2000 புதிய வேலைகள்

சிங்கப்பூரில் 2020-ஆம் ஆண்டுக்குள் மின்னியல் துறையில் "நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்களுக்கான" சுமார் 2000 வேலைகள் உருவாக்கப்படவிருக்கின்றன.

வாசிப்புநேரம் -
மின்னியல் துறையில் 2000 புதிய வேலைகள்

(படம்: Sutrisno Foo)

சிங்கப்பூரில் 2020-ஆம் ஆண்டுக்குள் மின்னியல் துறையில் "நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்களுக்கான" சுமார் 2000 வேலைகள் உருவாக்கப்படவிருக்கின்றன.

வர்த்தக, தொழில் அமைச்சர் S. ஈஸ்வரன் அதனைத் தெரிவித்தார்.
அந்தத் துறையை உருமாற்ற, இன்று தொடங்கப்பட்ட பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாக அது பற்றி அறிவிக்கப்பட்டது.

உயர்மதிப்புமிக்க அம்சங்களில் புதிய முதலிடுகளை ஈர்ப்பதற்கு நிறுவனங்களுக்குக் கைகொடுக்கவும் அந்தப் பெருந்திட்டம் இலக்கு கொண்டுள்ளது.

2020-ஆம் ஆண்டுக்குள் மின்னியல் துறையின் உற்பத்தி மதிப்பை 22 புள்ளி 2 பில்லியன் வெள்ளிக்கு மேம்படுத்தவும் திட்டம் உள்ளதாக அமைச்சர் ஈஸ்வரன் சொன்னார்.

சிங்கப்பூர் பொருளியலின் வளர்ச்சிக்கான முக்கியத் தூணாக அந்தத் துறை இருக்கிறது என்றும், அது தொடர்நது அவ்வாறு இருக்கும் என்றும் அவர் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்