Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மகப்பேறு ஏற்படுத்தும் மாபெரும் மாற்றம்

தான் பெற்றெடுத்த குழந்தையைத் தண்ணீரில் முக்கிக் கொல்லத் துணிந்த ஒரு தாய்....

வாசிப்புநேரம் -
மகப்பேறு ஏற்படுத்தும் மாபெரும் மாற்றம்

(படம்: Reuters)

தான் பெற்றெடுத்த குழந்தையைத் தண்ணீரில் முக்கிக் கொல்லத் துணிந்த ஒரு தாய்....

பிள்ளைக்காத் தன்னைப் பேணிப் பார்த்துக்கொண்டவர்,
மனந்துணிந்து பிள்ளையைக் கொல்லும் அளவு சென்றதற்குக் காரணம்....

மகப்பேற்றுக்குப் பின் உருவான மன உளைச்சல்.

மனம் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத அந்தத் தாய். பணப்பிரச்சினை, ஆதரவின்மை என்று பல்வேறு எதிர்பாரா எதிர்மறைத் தாக்கங்கள் நிகழும்போது, பெற்ற மனம் எதற்கும் துணிகிறது என்கிறார் அவர்.

மனச்சோர்வின் உச்சகட்டத்தில் மனம், தன் மகனைக் கொல்லத் துணிந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அதிலிருந்து மீண்டார். 

பின் அடுத்து மகள் பிறந்தபோது..மீண்டும் அதே மனச்சோர்வு. 

விரைவுச்சாலையில் வேகமாக வாகனத்தைச் செலுத்தினார்; தம்மை மாய்த்துக்கொள்ள முடிவு செய்தார். நல்லவேளையாகத் தப்பித்தார்.

பின் மனச்சோர்வு நீங்க மூவாண்டுகள் சிகிச்சை பெற்றார்.

சிங்கப்பூரின் நெருக்கடியான சமூகச் சூழலில், இளம் தாய்மார்கள் பல்வேறு கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. குறிப்பாக, குடும்ப ஆதரவு, வேலையிட ஆதரவு கிடைக்காத பெண்கள் என்கின்றனர் மருத்துவர்கள்.

புக்கிட் பாஞ்சாங்கில் சென்ற வாரம், இரண்டு மாதக் குழந்தையுடன், மாடியிலிருந்து விழுந்த 29 வயதுப் பெண்ணின் மரணம், இளம் தாய்மார்களுக்கு ஏற்படும் மனச்சோர்வு குறித்த விவாதத்தை எழுப்பியிருக்கிறது. 

மரணத்துக்கு முன்னால், "வேறு வழியே இல்லாவிட்டால், என்னதான் செய்வது" என்ற வார்த்தையை அவர் இணையத்தில் தேடியிருக்கிறார். 

அவரது மரணத்தைத் தொடர்ந்து, இளம் தாய்மார்களாகத் தாங்கள் சந்தித்த சவால்களைப் பலர் இணையம் வழி பகிர்ந்துகொண்டுள்ளனர். 

சிங்கப்பூரில் இளம் தாய்மார்களில் 6 இலிருந்து 8 விழுக்காட்டினர், மனச்சோர்வால் பாதிக்கப்படுகின்றனர் என்றார் KK சிறார் பெண்கள் மருத்துவமனையின் மனோவியல் நிபுணர் ஒருவர். 

சுரப்பிகளின் ஏற்ற இறக்கம், உடல்-உளரீதியான மாற்றங்கள் ஆகியவை அதற்குக் காரணம் என்றார் அவர். 

குடும்பத்தினர் அவர்களை உற்று கவனித்து, முழுமையாக ஆதரவு தரவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். 

கருவுற்றிருக்கும் தாய்மாரைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்; அவரால் முடியும் என்று ஊக்குவியுங்கள் என்றும் அவர் ஆலோசனை கூறினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்