Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மேம்பட்ட வசதிகளுடன் ரயில் பசுமைப் பாதை 2021ஆம் ஆண்டிற்குள் திறப்பு

24கிலோ மீட்டர் நீளம் கொண்ட ரயில் பசுமைப் பாதையின் ஒரு சில பகுதிகள் 2021ஆம் ஆண்டிற்குள் மேம்படுத்தப்படவுள்ளன. 

வாசிப்புநேரம் -
மேம்பட்ட வசதிகளுடன் ரயில் பசுமைப் பாதை 2021ஆம் ஆண்டிற்குள் திறப்பு

படம்: URA

24கிலோ மீட்டர் நீளம் கொண்ட ரயில் பசுமைப் பாதையின் ஒரு சில பகுதிகள் 2021ஆம் ஆண்டிற்குள் மேம்படுத்தப்படவுள்ளன.

தஞ்சோங் பகாரிலிருந்து உட்லண்ட்ஸ் வரை அந்தப் பாதை நீடிக்கின்றது. அதன் மூலம் பசுமைப் பாதையைப் பயன்படுத்துவோருக்குப் புதிய அனுபவம் கிடைக்கும்.

தேசியப் பூங்காக் கழகமும் நகரச் சீரமைப்பு ஆணையமும் இணைத்து வெளியிட்ட அறிக்கையில் அந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

புக்கிட் தீமாவிலிருந்து ஹில்வியூ வரை அமைந்துள்ள பாதையின் வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதிகள் சீரமைக்கப்படவுள்ளன.

புக்கிட் தீமா பழைய ரயில் நிலையம் மரபுடைமைக் கண்காட்சியகமாக மாற்றப்படும். அங்கிருந்த ரயில் நிலைய மேலாளரின் வீடு, உணவு, பானக் கடையாக மாற்றப்படும். இப்போது அந்தப் பாதையில் அத்தகைய வசதி இல்லை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்