Images
  • reception

சம்பளமில்லா வரவேற்பாளர்

"சம்பளம் வேண்டாம்; வருவோரை வரவேற்பேன்; தண்ணீர் கொடுத்து உபசரிப்பேன்; அன்பாகப் பேசுவேன்"

இப்படிச் சொல்லும் வரவேற்பாளர் வேண்டுமா? இருக்கிறார். பெயர் நாடின். எங்கிருக்கிறார்?

இவ்வளவு நாள் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஊடகப் புத்தாக்க நிலையத்தில்.

இனி கலை அறிவியல் அருங்காட்சியகத்தின் கண்காட்சியில்.

கண்காட்சி, இந்த மாதம் 20ஆம் தேதி முதல், அக்டோபர் 15 வரை நடைபெறுகிறது.

"The Future of our Species" என்பது அதன் பெயர். அங்கு நீங்கள் நாடினைச் சந்திக்கலாம்.

நாடினுக்கு ஒரு தம்பி இருக்கிறார். அவரது பெயர் சார்லி. அவரும் விரைவில் வரவேற்பறைக்கு வந்துவிடுவார் என்று உற்சாகம் பொங்கக் கூறுகின்றனர், இவர்களது வடிவமைப்பாளர்கள்.  

உங்கள் கருத்து

Top