Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'மாபெரும் சிங்கப்பூர் விற்பனை'-களையிழந்துவிட்டதா?

'மாபெரும் சிங்கப்பூர் விற்பனை'-களையிழந்துவிட்டதா?

வாசிப்புநேரம் -
'மாபெரும் சிங்கப்பூர் விற்பனை'-களையிழந்துவிட்டதா?

(படம்: Wee Teck Hian/TODAY)

மின்னிலக்கத் தொழில்நுட்பம், சிறப்புச் சலுகைகள் இவற்றின் வழி விளம்பரப்படுத்தப்பட்டாலும், மாபெரும் சிங்கப்பூர் விற்பனைக்குப் போதிய வரவேற்பில்லை என்கின்றனர் கடைக்காரர்களும், வாடிக்கையாளர்களும்.

ஜூன் 9ஆம் தேதி தொடங்கிய விற்பனைக் காலம் நேற்று முடிவடைந்தது. தொடக்கத்தில் சில்லறை வர்த்தகத் துறைக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக விளங்கியது விற்பனைக் காலம். ஆனால் காலப்போக்கில் அது பொலிவிழந்துவிட்டதாகக் கூறுகின்றனர் கடைக்காரர்கள்.

வெளிநாடுகளில் பொருட்கள் வாங்குவதிலும், இணையம் வழி பொருட்கள் வாங்குவதிலும் மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதே அதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

ஜூன் மாதம் சிங்கப்பூரின் ஒட்டுமொத்த சில்லறை விற்பனை சுமார் 2 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. அறைகலன்கள், கடிகாரம், நகைகள் போன்ற பொருட்களின் விற்பனை அதிகரித்திருக்கிறது; அதற்குக் காரணம் ரமதான் பண்டிகையே அன்றி, விற்பனைக் காலம் அல்ல என்றார் வங்கியாளர் ஒருவர்.

ஆண்டுகொருமுறை விற்பனைக் காலத்தில் வாங்கிச் சேமித்து வைக்கும் காலம் மலையேறிவிட்டது; இன்றைய இளையர்கள் தேவைக்கு ஏற்ப, காலப்போக்குக்கு ஏற்ப, அப்போதைக்கு அப்போது வாங்குவதையே விரும்புகின்றனர் என்ற பொதுவான கருத்தும் முன்வைக்கப்பட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்