Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

டிரம்ப்பை மறைமுகமாகக் குறைகூறும் புஷ் - சினமடையும் முன்னாள் வெள்ளை மாளிகை அதிகாரி

வெள்ளை மாளிகையின் முன்னாள் கொள்கை வடிவமைப்பாளர் ஸ்டீவ் பேனன் (Steve Bannon), அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் W புஷைச் (George W Bush) சாடியுள்ளார்.

வாசிப்புநேரம் -
டிரம்ப்பை மறைமுகமாகக் குறைகூறும் புஷ் - சினமடையும் முன்னாள் வெள்ளை மாளிகை அதிகாரி

(படம்: AFP)

வெள்ளை மாளிகையின் முன்னாள் கொள்கை வடிவமைப்பாளர் ஸ்டீவ் பேனன் (Steve Bannon), அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் W புஷைச் (George W Bush) சாடியுள்ளார்.

திரு. புஷ், அதிபர் டோனல்ட் டிரம்ப்பை மறைமுகமாகக் குறைகூறியதையடுத்துத் திரு. பேனன் அவ்வாறு சாடினார்.

கலிஃபோர்னியாவில் நடந்த குடியரசுக் கட்சிப் பேரணியில் அவர் உரையாற்றினார்.

திரு. புஷ், தாம் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் பேசுவதாக அவர் கூறினார்.

அதிபர் பதவியில் இருந்தபோதும் அவர் அவ்வாறே செய்ததாகத் திரு. பேனன் குறிப்பிட்டார்.

மேலும், அமெரிக்காவின் ஆக மோசமான தலைவர்களில் திரு. புஷும் ஒருவர் என்றார் அவர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்