Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு எளிதில் சிகரெட் கிடைக்கிறதா?

சிங்கப்பூரில் 18இலிருந்து 21 வயதுக்கு உட்பட்ட புகைபிடிப்போரில், முக்கால்வாசிப் பேர், 14 அல்லது அதற்கும் குறைவான வயதில் அந்தப் பழக்கத்தைத் தொடங்கியிருக்கின்றனர். 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் 18இலிருந்து 21 வயதுக்கு உட்பட்ட புகைபிடிப்போரில், முக்கால்வாசிப் பேர், 14 அல்லது அதற்கும் குறைவான வயதில் அந்தப் பழக்கத்தைத் தொடங்கியிருக்கின்றனர்.

பதின்ம வயதினருக்கு சிகரெட்டுகள் கிடைப்பது எவ்வளவு சுலபமாக உள்ளது என்பதைக் கண்டறிய, மீடியாகார்ப்பின் Talking Point நிகழ்ச்சி சோதனை ஒன்றை நடத்தியது.

முன்பின் தெரியாதோர் இளையர்களுக்காக உரிமம் உள்ள கடைகளிலிருந்து சிகரெட்டுகளை வாங்க ஒப்புக்கொள்கின்றனரா?

18 வயதிலிருந்து 21 வயதுக்குட்பட்ட, புகைபிடிக்கும் பழக்கம் கொண்ட 321 பேரில் 63 விழுக்காட்டினர், 15இலிருந்து 17வயதுக்குள் அந்தப் பழக்கத்தைத் தொடங்கியிருக்கின்றனர். 4 விழுக்காட்டினர் அதற்கும் குறைவான வயதில் முதன்முதலில் புகைபிடித்துள்ளனர்.

2021ஆம் ஆண்டுக்குள், சிங்கப்பூரில் புகைபிடிக்க அனுமதிக்கப்படும் வயது 18இலிருந்து 21க்குக் கட்டங்கட்டமாக அதிகரிக்கப்படும் எனச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சிறுவயதிலேயே புகைபிடிப்பவர்களை அந்தப் பழக்கத்திலிருந்து விடுவிக்கும் வழிகள் ஆராயப்படுகின்றன.

மூன்றில் இரண்டு பகுதியினர், சக மாணவர்கள், நண்பர்கள் ஆகியோரிடமிருந்து புகையிலையைப் பெறுவதாக அமைச்சு சொன்னது.

Talking Point ஆய்வில் கலந்துகொண்ட பாதிக்கும் மேற்பட்டோர் உறவினர்களிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் பெறுவதாகக் கூறினர்.

மேலும் 30 விழுக்காட்டினர் உரிமம் பெற்ற கடைகளிலிருந்து சிகரெட்டுகளை வாங்குவதாகவும் ஆய்வில் தெரியவந்தது.

ஐந்தில் ஒருவர் முன்பின் தெரியாதோர், உரிமம் பெறாத கடைக்காரர்கள் போன்றவர்களிடமிருந்து சிகரெட்டுகளைப் பெறுவதாகக் கூறினர்.

இளம் வயதில் சிகரெட்டுகளைப் பெறுவது சுலபமா என்பதைக் கண்டறிய  சிறுவயதுப் பையன் போலத் தோற்றம் கொண்ட18 வயது நடிகர் ஒருவர் 10 கடைகள் ஏறி இறங்கினார்.

முன்பின் தெரியாதவர்களை அணுகி சிகரெட்டுகளைக் கேட்டபோது பத்தில் ஐந்து பேர், வயதை உறுதிப்படுத்தாமல் தங்களின் சிகரெட்டுகளை இளையருக்குக் கொடுத்தனர்.

கடந்த ஆண்டு நிலவரப்படி சிங்கப்பூரில் 4,700க்கும் மேற்பட்ட கடைகளில் புகையிலைப் பொருட்கள் விற்கப்படுக்கின்றன.

18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்குச் சிகரெட்டுகளை விற்போருக்கு 5,000 வெள்ளி வரையில் அபராதம் விதிக்கப்படலாம். புகையிலைப் பொருட்களை விற்பதற்கான உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்