Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

வரவுசெலவுத் திட்டம்: நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகள்

சிங்கப்பூர், அனைத்துலக ரீதியில் போட்டித்தன்மையுடன் இருப்பதற்கும், கற்றலுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளும் வகையில் தனிநபர்களுக்கு அதிகாரம் வழங்குவதற்கும் SkillsFuture எனும் எதிர்காலத்துக்குத் தேவையான திறன் மேம்பாட்டு முயற்சிகள் தேவை.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர், அனைத்துலக ரீதியில் போட்டித்தன்மையுடன் இருப்பதற்கும், கற்றலுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளும் வகையில் தனிநபர்களுக்கு அதிகாரம் வழங்குவதற்கும் SkillsFuture எனும் எதிர்காலத்துக்குத் தேவையான திறன் மேம்பாட்டு முயற்சிகள் தேவை.

சிங்கப்பூர்: இவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் பற்றிய விவாதத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தக் கருத்தை முன்வைத்தனர்.
நாடாளுமன்றத்தில் இன்று பேசிய 25 உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். அவர்கள் இந்த ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தை வரவேற்றனர். வாழ்க்கையின் வெவ்வேறு கட்டத்தில் இருக்கும் எல்லா சிங்கப்பூரர்களுக்கும் ஆதரவு தரும் வகையில் வரவு செலவுத் திட்டம் வரையப்பட்டுள்ளது.

இருப்பினும், அவர்கள் சில அக்கறைகளையும் முன்வைத்தனர்.
அதிகரித்துவரும் செலவுகளைச் சமாளிக்க, அரசாங்கம், தனது வருமானத்தையும் போதிய அளவு உயர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறினர். அதற்கான பல்வேறு யோசனைகளையும் மன்ற உறுப்பினர்கள் முன்வைத்தனர்.
உதாரணத்துக்கு, SkillsFuture திட்டத்தை, முதுநிலைக் கல்விக்கு விரிவுபடுத்தலாம் என்று திருவாட்டி டின் பேய் லிங் (Tin Pei Ling) கூறினார்.தொடர் கல்விக்கும் பயிற்சிக்கும் ஆதரவளிக்கும் விதத்தில், அரசாங்கம், இவ்வாண்டு முதல், 2020 வரை, SkillsFuture திட்டத்துக்கு ஆண்டுதோறும் ஒரு பில்லியன் வெள்ளியை செலவிடவிருக்கிறது.

அரசாங்கம் அதன் பங்கைச் செய்யும் நிலையில், நிறுவனங்களும் அதனை நனவாக்க முயற்சிகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்ப்பதாக, ஈஸ்ட் கோஸ்ட் (East Coast) குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெசிக்கா டான் (Jessica Tan) கூறினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்