Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

தமிழை ஏன் அதிகாரத்துவ மொழியாக்கினார் லீ குவான் இயூ?

நமது முன்னோர்களின் பாரம்பரியம் குறித்து நாம் பெருமை கொள்ள வேண்டும். அதை நிலைநிறுத்துவதற்காகவே திரு லீ, சிங்கப்பூரில் தமிழை ஆட்சி மொழியாக்கினார். தமிழைத் தொடர்ந்து வாழும் மொழியாக்குவது நமது கடமை என்று சுற்றுப்புற நீர்வளத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் கூறினார்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: நமது முன்னோர்களின் பாரம்பரியம் குறித்து நாம் பெருமை கொள்ள வேண்டும். அதை நிலைநிறுத்துவதற்காகவே திரு லீ குவான் இயூ , சிங்கப்பூரில் தமிழை ஆட்சி மொழியாக்கினார். தமிழைத் தொடர்ந்து வாழும் மொழியாக்குவது நமது கடமை என்று சுற்றுப்புற நீர்வளத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகத்தின் திருக்குறள் விழாவில் அவர் கலந்துகொண்டு பேசினார். ஆசிய வட்டாரத்தில் தமிழ் ஆட்சிமொழியாக இருக்கும் நாடுகளில் இலங்கையும் ஒன்று. 1970களில் அங்கு தமிழ் ஆட்சி மொழியாக்கப் பட்டது. ஆனால், ஜம்பது ஆண்டுகளுக்கு முன்னரே சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழியாக்கப் பட்டுள்ளது.

மறைந்த திரு லீ குவான் இயூ, இருமொழிக் கொள்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாக திரு விவியன் பாலகிருஷ்ணன் கூறினார்.

விழாவில் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜயும் கலந்துகொண்டார். அவருக்கு திருவள்ளுவர் விருது வழங்கப்பட்டது. தாய்மொழியை எப்படி நேசிப்பது என்று தமிழர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும் என்றார் திரு தருண் விஜய்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்