Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

ஊழியர்களுக்கு அன்பளிப்பு வழங்கும் நிறுவனங்கள்

சிங்கப்பூர் தனது சுதந்திரப் பொன்விழாவைக் கொண்டாடும் நேரத்தில், வர்த்தக நிறுவனங்கள் சில அதைத் தங்கள் மதிப்புமிக்க ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வாய்ப்பாகவும் பயன்படுத்திக் கொண்டுள்ளன. 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: சிங்கப்பூர் தனது சுதந்திரப் பொன்விழாவைக் கொண்டாடும் நேரத்தில், வர்த்தக நிறுவனங்கள் சில அதைத் தங்கள் மதிப்புமிக்க ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வாய்ப்பாகவும் பயன்படுத்திக் கொண்டுள்ளன. சிறப்பு போனஸ், பற்றுச் சீட்டுகள், நினைவுப் பரிசுகள் எனப் பலவிதமான அன்பளிப்புகளை அவை வழங்கியுள்ளன.

DBS வங்கி தனது சந்தை மூலதன இலக்கான 50 பில்லியன் வெள்ளியை இந்த ஆண்டு எட்டியது. அதையும் பொன்விழாவையும் கொண்டாடும் வகையில் அந்த வங்கி ஆண்டுத் தொடக்கத்தில் சிறப்பு போனசை அறிவித்தது. துணைத் தலைவர் பதவியிலும் அதற்குக் கீழும் உள்ள ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் அது ஆயிரம் வெள்ளி ரொக்கத்தைப் பரிசாக வழங்கியது.

DBS வங்கி மட்டுமல்லாது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், SMRT நிறுவனம், UOB, OCBC வங்கிகள் போன்றவையும் தங்களுடைய ஊழியர்களுக்கு வெகுமதி வழங்கியுள்ளன. OCBC வங்கி இளம் நிர்வாகிகளுக்கு ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள தனது வங்கிப் பங்குகளையும் சிறப்புப் பயண அட்டைகளையும் வழங்கியது. UOB வங்கி கூடுதலாக ஒரு நாள் விடுப்பும், ஆயிரம் வெள்ளி ரொக்கமும் கொடுத்துள்ளது.

பெஸ்ட்பஸ்டர்ஸ் (Pestbusters) என்னும் பூச்சிக்கொல்லி நிறுவனம் தனது உள்நாட்டு வெளிநாட்டு ஊழியர்கள் அனைவருக்கும் 50 வெள்ளிப் பற்றுச்சீட்டை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. நெட்வொர்க் கூரியர் என்னும் தூது அஞ்சல் நிறுவனம் வழக்கமான வேலைநாளான வரும் சனிக்கிழமையை விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்