Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

அரசாங்கம் இடதுசாரிக் கொள்கைக்கு மாறுகிறதா? நாடாளுமன்ற நாயகர் பதில்

இடது சாரிக் கொள்கையா அல்லது வலது சாரிக் கொள்கையா என்ற கேள்வகளைத் தாண்டி  உண்மையில், நாம் முன்னேறிச் செல்கிறோமா என்பதுதான் முக்கியமானது என்று ஓர் உறுப்பினர் சொன்னதே சரியான கருத்து என்றார் திருவாட்டி ஹலிமா. 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: வரவு செலவுத் திட்டம் 2015, சிங்கப்பூரின் பொன்விழா வரவு செலவுத் திட்டம் என்ற பெயருக்கேற்ப அமைந்திருப்பதாக, நாடாளுமன்ற நாயகர் திருவாட்டி ஹலிமா யாக்கோப் கூறியிருக்கிறார். நியாயமான, அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்கவும், வருங்காலத்துக்கு நம்மைத் தயார்ப்படுத்தவும் உதவக்கூடிய திட்டம் அது என்பதை, பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.

அதிக நிதிச்சிரமத்தில் இருப்போருக்கு உதவும் திட்டங்களை அறிவித்துள்ளதன் மூலம், அரசாங்கம் இடதுசாரிக் கொள்கைக்கு மாறுகிறதா என்பது பற்றி, அதிகம் விவாதிக்கப்பட்டதை, திருவாட்டி ஹலிமா சுட்டினார். நலத் திட்டங்களுக்கு அதிகம் செலவிடும் இட-சாரிப் போக்கோ, முதலாளித்துவ வலது சாரிப் போக்கோ இரண்டையுமே அதிகம் சார்ந்திருப்பது சரியல்ல என மன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டிருந்தனர். இடது சாரிக் கொள்கையோ, வல-சாரிக் கொள்கையோ, உண்மையில், நாம் முன்னேறிச் செல்கிறோமா என்பதுதான் முக்கியமானது என்று ஓர் உறுப்பினர் சொன்னதே சரியான கருத்து என்றார் திருவாட்டி ஹலிமா.

மக்களுக்கு எது நன்மை தரும் ? சிங்கப்பூருக்குப் பொருந்தக் கூடியது எது ? என்பதன் அடிப்படையிலேயே கொள்கைகள் வகுக்கப்பட வேண்டுமென, வரவு செலவுத் திட்ட விவாதத்தை முடித்து வைத்துக் குறிப்பிட்டார் அவர். அரசாங்கக் கொள்கைகள் பற்றி, மக்களிடையே நிலவும் தவறான எண்ணங்களைக் களைய, கூடுதல் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டியிருப்பதாகவும் அவர் சொன்னார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்