Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

வரவு செலவுத் திட்டம்: வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களுக்கான சலுகைத் தீர்வைக் கட்டணம் பாதியாகக் குறைப்பு

வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களுக்கான சலுகைத் தீர்வைக் கட்டணம் பாதியாகக் குறைக்கப்படுகிறது. 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களுக்கான சலுகைத் தீர்வைக் கட்டணம் பாதியாகக் குறைக்கப்படுகிறது. இந்த ஆண்டு மே மாதம் அந்த மாற்றம் நடப்புக்கு வரும். பிள்ளைகள் உடைய குடும்பங்களுக்கு உதவுவதே அந்தக் கட்டணக் குறைப்பின் நோக்கம் என்று துணைப் பிரதமர் தர்மன் தமது வரவு செலவுத் திட்ட உரையில் தெரிவித்தார். தற்போது மாதம் 120 வெள்ளியாக இருக்கும் சலுகைத் தீர்வைக் கட்டணம் 60 வெள்ளியாகும். அந்தச் சலுகைத் தீர்வைக் கட்டணம், 16 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் இருக்கும் குடும்பங்களுக்கும் நீட்டிக்கப்படுகிறது. தற்போது அந்தச் சலுகைக் கட்டணம், 12 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் உடைய குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. தீர்வைக் குறைப்பால், சுமார் 144-ஆயிரத்து-ஐந்நூறு குடும்பங்கள் பயன்பெறும். அதற்காக அரசாங்கம் ஆண்டுதோறும் சுமார் 125 மில்லியன் வெள்ளியைச் செலவிடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்