Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

வரவுச் செலவுத் திட்டம்: வெளிநாட்டு ஊழியர்களுக்கான தீர்வையை உயர்த்தும் திட்டம் தள்ளிவைப்பு

வெளிநாட்டு ஊழியர்களுக்கான தீர்வையை உயர்த்தும் திட்டத்தை, அரசாங்கம் தள்ளி வைத்திருப்பதை, வர்த்தகச் சமூகத்தினர்   வரவேற்றுள்ளனர். 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: வெளிநாட்டு ஊழியர்களுக்கான தீர்வையை உயர்த்தும் திட்டத்தை, அரசாங்கம் தள்ளி வைத்திருப்பதை, வர்த்தகச் சமூகத்தினர்   வரவேற்றுள்ளனர். தொழில்துறையில் உயர்ந்துவரும் செலவைச் சமாளிப்பதற்கு, அது உதவும் என்று அவர்கள் நம்புகின்றனர். சிங்கப்பூரில், வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த, அரசாங்கம்  பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

கடந்த சில ஆண்டுகளில், வெளிநாட்டு ஊழியர்களின் தீர்வை உயர்த்தப்பட்டதாலும், போதுமான ஊழியர்கள் இல்லாததாலும், ஊழியர்களுக்கான செலவு உயர்ந்துள்ளது.

அதுவே, நிறுவனங்களின் ஆகப் பெரிய குறையாக இருந்து வருகிறது. சிங்கப்பூர்ப் பொருளியல், ஓரளவு வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில்,  மெதுவடைந்துவரும் தேவைகள், உயர்ந்துவரும் செலவுகள்-ஆகியவற்றை சமாளிக்க, நிறுவனங்கள் போராடிவருகின்றன. அதனால், வெளிநாட்டு ஊழியர்களுக்கான தீர்வையை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் முடிவு, மறுசீரமைப்பு முயற்சிகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்