Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

திரு லீக்கு பிரியாவிடை அளித்த முக்கிய பிரமுகர்கள்

நாடாளுமன்றத்தில் கிடத்தி வைக்கப்பட்டிருக்கும் திரு லீ குவான் இயூவின் நல்லுடலுக்கு மரியாதைச் செலுத்த இன்று இறுதி நாள். இன்றும் பல முக்கிய பிரமுகர்கள் அவருக்குப் பிரியாவிடை அளித்தனர்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்:நாடாளுமன்றத்தில் கிடத்தி வைக்கப்பட்டிருக்கும் திரு லீ குவான் இயூவின் நல்லுடலுக்கு மரியாதைச் செலுத்த இன்று இறுதி நாள். இன்றும் பல முக்கிய பிரமுகர்கள் அவருக்குப் பிரியாவிடை அளித்தனர்.

அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் திரு ஹென்ரி கிஸ்ஸிங்கர் (Henry Kissinger) இன்று வந்த அரசியல் தலைவர்களில் ஒருவர். Washington Post நாளேட்டில் திரு லீக்கு அவர் சூட்டியப் புகழாரத்தில்,  திரு லீ மிகச் சிறந்த மனிதர் என்றும் நெருங்கிய நண்பர் என்றும் திரு கிஸ்ஸிங்கர் வருணித்திருந்தார். திரு லீயின் நட்பு, தமக்குக் கிடைத்த மிகப் பெரிய பாக்கியம் என்று கூறிய திரு. கிஸ்ஸிங்கர், உலகம் அவருடைய தலைமைத்துவத்தை இழந்துவிட்டதாகச் சொன்னார்.

அரசு மரியாதையோடு நடைபெறும் திரு. லீயின் இறுதிச் சடங்கில்  முன்னாள் அதிபர் திரு பில் கிளின்டன் (Bill Clinton) தலைமையில் அமெரிக்கப் பேராளர் குழு கலந்துகொள்ளும்.அந்தக் குழுவில் திரு கிஸ்ஸிங்கரும்ரும் இடம்பெற்றுள்ளார்.

மலேசிய முன்னாள் நிதியமைச்சர் திரு டயிம் ஸைனுடின் (Daim Zainuddin), பூட்டான் அரசர், இந்தோனேசிய தேசிய ஆயுதப்படையின் முன்னாள் லெஃடின்னட் ஜெனரல் திரு பிர

திரு Prabowo Subianto, பிலிப்பீன்ஸ் வெளியுறவு அமைச்சர் திரு Albert del Rosario, தைவானிய முன்னாள் பிரதமர் திரு Hau Pei-tsun,  Alibaba நிறுவனர் திரு Jack Ma உள்ளிட்டோரும் இன்று நாடாளுமன்றத்தில் தங்கள் இறுதி மரியாதையைச் செலுத்தினர்.      

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்