Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

பேருந்து, ரயில் சேவைகள் இன்று நீட்டிப்பு

மறைந்த திரு லீ குவான் இயூவுக்கு இறுதி மரியாதை செலுத்த, நாடாளுமன்றக் கட்டடத்துக்குச் செல்லும் பொதுமக்களுக்கு வசதியாக, எம்ஆர்டி சேவைகள் இன்று இரவு நீட்டிக்கப்படும்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: மறைந்த திரு லீ குவான் இயூவுக்கு இறுதி மரியாதை செலுத்த, நாடாளுமன்றக் கட்டடத்துக்குச் செல்லும் பொதுமக்களுக்கு வசதியாக, எம்ஆர்டி சேவைகள் இன்று இரவு நீட்டிக்கப்படும்.

நகர மண்டபம், ராபிள்ஸ் பிளைஸ்சில், கிளர்க் குவே(Clarke Quay) எம்ஆர்டி நிலையங்களில் இருந்து, கடைசி ரயில்கள், நள்ளிரவு கடந்து, ஒரு மணி அளவில் புறப்படும்.

இலகு ரயில் சேவைகளும், 41 இடைவழி பேருந்துச் சேவைகளும், ரயில் சேவைகளுக்கு ஏற்ப நீட்டிக்கப்படும்.

எஸ்பிஎஸ் டிரான்சிட், எஸ்எம்ஆர்டி நிறுவனங்கள், இரண்டும், அவற்றின் இரவு நேரப் பேருந்துச் சேவைகளையும் அதிகரிக்கும்.

இன்று நள்ளிரவு 12 மணிமுதல், நாளை காலை 6 மணிவரை, 13 இரவு நேரப் பேருந்துச் சேவைகள், 15 நிமிட இடைவெளியில் சேவையாற்றும்.

ஜூரோங், புக்கிட் பாத்தோக், யீஷூன், அங் மோ கியோ, செங்காங், தெம்பனீஸ் ஆகிய வட்டாரங்களுக்குச் சேவை வழங்கப்படும்.

நாளை காலை 11 மணிமுதல், மாலை ஆறு மணிவரை, அனைத்து ரயில் சேவைகளும், குறைவான இடைவெளியில், மூன்றில் இருந்து ஐந்து நிமிட இடைவெளியில் சேவையாற்றும்.

அரசு மரியாதையுடனான திரு லீயின் இறுதிச் சடங்கு ஊர்வலத்தைப் பார்க்கச் செல்பவர்களுக்கு அது வசதியாக இருக்கும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்