Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

திரு லீயின் அரசுபூர்வ இறுதிச் சடங்கில் தலைவர்கள், அரசதந்திரிகள் பங்கேற்பு

காலஞ்சென்ற திரு லீ குவான் இயூவின் அரசுபூர்வ இறுதிச் சடங்கில் உலகெங்கிலும் இருந்தும் தலைவர்களும், அரசதந்திரிகளும் கலந்துகொள்ளவிருக்கின்றனர். 

வாசிப்புநேரம் -
திரு லீயின் அரசுபூர்வ இறுதிச் சடங்கில் தலைவர்கள், அரசதந்திரிகள் பங்கேற்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே, முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்டன்( படம்: AFP)

சிங்கப்பூர்: காலஞ்சென்ற திரு லீ குவான் இயூவின் அரசுபூர்வ இறுதிச் சடங்கில் உலகெங்கிலும் இருந்தும் தலைவர்களும், அரசதந்திரிகளும் கலந்துகொள்ளவிருக்கின்றனர். நாளை, பல்கலைக்கழகக் கலாசார நிலையத்தில், பிற்பகல் 2 மணி முதல் மாலை ஐந்தேகால் மணி வரை சடங்கு இடம்பெறும்.

மலேசிய மன்னர் அப்துல் ஹலிம், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, மியன்மார் அதிபர் தென் சேன்(Thein Sein), தாய்லந்துப் பிரதமர் பிரயுத் சான்-ஒச்சா(Prayuth Chan-ocha), காம்போடியப் பிரதமர் ஹுன் சேன்(Hun Sen), வியட்நாமிய பிரதமர் இங்குயென் டான் டுங்(Nguyen Tan Dung) ஆகிய தென்கிழக்காசியத் தலைவர்கள், இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள கடப்பாடு தெரிவித்துள்ளனர். ஆசியத் தலைவர்கள் சிலரும் திரு லீயின் இறுதிச் சடங்கில் பங்குபெற விருப்பம் தெரிவித்துள்ளனர். சீனத் துணை அதிபர் லி யுவான்சோவ்(Li Yuanchao), ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தென் கொரிய அதிபர் பார்க் ஜென் ஹெய்(Park Gen Hay), ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட் ஆகியோர் அவர்களில் அடங்குவர். உலகின் மற்ற பகுதிகளில் இருந்தும் தலைவர்கள் வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னைய அதிபர் பில் கிளின்டன், அதிபர் பேராளர் குழு ஒன்றை வழிநடத்தி வரவிருக்கிறார். திரு லீ குவான் இயூவுக்கு மிக நெருக்கமான நண்பர், அமெரிக்காவின் முன்னைய வெளியுறவு அமைச்சர் ஹென்ரி கிஸ்ஸிங்கர்(Henry Kissinger) குழுவில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹஃக்(William Hague), தம் நாட்டைப் பிரதிநிதிப்பார் என்று இங்குள்ள அதன் உயர் ஆணையம் தெரிவித்தது. கனடாவின் தலைமை ஆளுநர் டேவிட் ஜோன்ஸ்டனும்(David Johnston) அவர்களுடன் சேர்ந்துகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்