Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

திரு லீக்கு சிங்கப்பூர் ஆயுதப் படை ஆக உயரிய மரியாதையைச் செய்யும்: அமைச்சர் இங்

மறைந்த திரு லீ குவான் இயூவின் இறுதி ஊர்வலத்தின்போது, நாளை, சிங்கப்பூர் ஆயுதப் படை, ஆக உயரிய மரியாதையைச் செய்யும் எனத் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென்(Ng Eng Hen) தெரிவித்துள்ளார். 

வாசிப்புநேரம் -
திரு லீக்கு சிங்கப்பூர் ஆயுதப் படை ஆக உயரிய மரியாதையைச் செய்யும்: அமைச்சர் இங்

மறைந்த திரு லீ குவான் இயூவின் இறுதி ஊர்வலத்திற்கு தயாராகும் சிங்கப்பூர் ஆயுதப் படையினர்.(படம்: Jack Board)

சிங்கப்பூர்: மறைந்த திரு லீ குவான் இயூவின் இறுதி ஊர்வலத்தின்போது, நாளை, சிங்கப்பூர் ஆயுதப் படை, ஆக உயரிய மரியாதையைச் செய்யும் எனத் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென்(Ng Eng Hen) தெரிவித்துள்ளார். தமது பேஸ்புக் பக்கத்தில் அவர் அதனைத் தெரிவித்தார். திரு லீயின் நல்லுடலை ஏந்திய பேழை, பீரங்கி வாகனத்தில் வைக்கப்பட்டு, நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து புறப்பட்டு பாடாங்கைச் சுற்றி ஊர்வலம் செல்லும்போது 21 மரியாதைக் குண்டு முழக்கம் இடம்பெறும். நல்லுடல் சிட்டி ஹாலை நெருங்கும்போது, நான்கு Black Knights விமானங்கள், திரு லீக்கு மரியாதை செலுத்தும். Esplanade பாலம் வழியாகச் செல்லும்போது, மரினா பராஜ்ஜில், RSS Dauntless, RSS Resilience ஆகிய கண்காணிப்புக் கப்பல்கள், சடங்குபூர்வ இறுதி மரியாதையைச் செலுத்தும். அந்த இறுதித் தருணமும், பிரிவும் மன வேதனையைத் தரும். இருப்பினும் இயல்பு வாழ்க்கை தொடரும் என்றார் டாக்டர் இங்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்