Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

உடற்குறையுள்ளோர், முதியோர் ஆகியோருக்குக் கூடுதல் ஆதரவு (வீடியோ)

இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டம் வசதி-குறைந்தோர், குறைந்த வருமானம் ஈட்டுவோர், உடற்குறையுள்ளோர், முதியோர் ஆகியோருக்குக் கூடுதல் ஆதரவு வழங்கவிருக்கிறது.

வாசிப்புநேரம் -
உடற்குறையுள்ளோர், முதியோர் ஆகியோருக்குக் கூடுதல் ஆதரவு (வீடியோ)

படம்- channelnewsasia

சிங்கப்பூர்: இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டம் வசதி-குறைந்தோர், குறைந்த வருமானம் ஈட்டுவோர், உடற்குறையுள்ளோர், முதியோர் ஆகியோருக்குக் கூடுதல் ஆதரவு வழங்கவிருக்கிறது.  வேலை-நலன் சம்பள ஊக்குவிப்புத் திட்டத்தில் தகுதிபெறுவதற்கான அதிகபட்ச சம்பள நிலை, ஈராயிரம் வெள்ளிக்கு உயர்த்தப்படும்.

தற்போது அது சராசரியாக ஆயிரத்து-தொள்ளாயிரம் வெள்ளியாக இருக்கிறது. முதிய ஊழியர்களுக்கும், குறைந்த வருமான ஊழியர்களுக்குமான, சம்பளத்துக்கும் மத்திய சேமநிதிச் சேமிப்புக்கும் அந்தத் திட்டம் ஆதரவு வழங்குகிறது.

உயர்த்தப்பட்டிருக்கும் தகுதி-நிலையால், சுமார் 460 ஆயிரம் சிங்கப்பூரர்கள் பயனடைவர் என எதிர்பார்ப்பதாக, நிதியமைச்சர் Heng சொன்னார்.  வயதையும், சம்பளத்தையும் பொறுத்து, அந்தத் திட்டத்தின்-மூலம் ஊழியர்கள் கூடுதல் தொகையைப் பெறவிருக்கின்றனர். முன்பு, காலாண்டு அடிப்படையில் வழங்கப்பட்ட அந்தத் தொகை, இனி மாதந்திர அடிப்படையில் வழங்கப்படும்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து அந்த மாற்றங்கள் நடப்புக்கு வரும். உடற்குறையுள்ள, குறைந்த வருமான ஊழியர்கள், வயது வரம்பின்றி, வேலை-நலன் பயிற்சி ஆதரவுத் திட்டத்துக்குத் தகுதிபெறுவர் என்றும் திரு Heng சொன்னார்.

தற்போது, 35 வயதையும்-கடந்த குறைந்த வருமான ஊழியர்கள் மட்டுமே, அந்தத் திட்டத்துக்குத் தகுதிபெறுகின்றனர். தகுதிபெறும் ஊழியர்கள், வேலை வாய்ப்பை அதிகரித்துக்கொள்ள, திறன்களை மேம்படுத்திக்கொள்வதற்கான பயிற்சிகளுக்குச் செல்ல அது வகைசெய்கிறது.மூப்படையும் சமூகமாக இருப்பதால், துடிப்பாக முப்படைவதை ஊக்குவிப்பதற்கும், வெற்றிகரமாக முப்படையும் முன்மாதிரியாக சிங்கப்பூரை வைத்திருப்பது அவசியம் என்றார் திரு Heng.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்