Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

பெற்றோர்களுக்கு கூடுதல் ஆதரவு வழங்கும் திட்டம்

இன்றிலிருந்து பிறக்கும் குழந்தைகளுக்குக் கூடுதலாக மூவாயிரம் வெள்ளி "தொடக்க மானியம்", பிள்ளை மேம்பாட்டுக் கணக்கில் போடப்படும்.

வாசிப்புநேரம் -
பெற்றோர்களுக்கு கூடுதல் ஆதரவு வழங்கும் திட்டம்

(படம்: டுடே)

இன்றிலிருந்து பிறக்கும் குழந்தைகளுக்குக் கூடுதலாக மூவாயிரம் வெள்ளி "தொடக்க மானியம்", பிள்ளை மேம்பாட்டுக் கணக்கில் போடப்படும்.

பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்க அரசாங்கம் அறிமுகம் செய்திருக்கும் புதிய நடவடிக்கைகளில் அதுவும் ஒன்று.

பிள்ளை மேம்பாட்டுக் கணக்கு, மகப்பேற்று ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் வரும், சிறப்பு கணக்கு.
அதில் சேமிக்கப்படும் தொகைக்கு, வெள்ளிக்கு வெள்ளி எனும் அடிப்படையில் அரசாங்கம் ஆதரவு வழங்குகிறது. 

அந்த மானியத்தைப் பிள்ளை மேம்பாட்டுக் கணக்கில் தகுதிபெறும் குழந்தைகளின் பெற்றோர் பெற்றுக்கொள்வர். 

குழந்தைகளின் சுகாதாரப் பராமரிப்பு, குழந்தைப் பராமரிப்புத் தேவைகளுக்கு அதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அந்த மானியத்துக்குத் தகுதிபெற, பெற்றோர், வரும் ஜூலை மாதம், முதல் தேதிக்குப் பிறகு, அந்தக் கணக்கில் சேமிக்கத் தொடங்கவேண்டும்.

பிள்ளைகளுக்கு வாழ்க்கையில் நல்ல தொடக்கத்தை வழங்க, பெற்றோருக்குக் கூடுதல் ஆதரவு வழங்கும் புதிய திட்டம் ஒன்றும் அறிமுகம் காணும்.
Kid START எனும் அது, பிள்ளைகளின் முதல் ஆறாண்டுகளுக்குக் கைகொடுக்கும்.
சுமார் ஆயிரம் பிள்ளைகள் அதன்மூலம் பயன்பெறுவர்.
அதற்கு 20 million வெள்ளிக்கும் அதிகமாக ஒதுக்கப்படும் 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்