Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

வரவு செலவுத் திட்டம்: நாடாளுமன்றத்திலிருந்து கருத்துகள்(வீடியோ)

மூத்த குடிமக்கள் தொடர்ந்து வேலையில் நீடிப்பதற்கான சில அரசாங்கத் திட்டங்கள் மேம்பாடு கண்டுள்ளன.

வாசிப்புநேரம் -

மூத்த குடிமக்கள் தொடர்ந்து வேலையில் நீடிப்பதற்கான சில அரசாங்கத் திட்டங்கள் மேம்பாடு கண்டுள்ளன.

பெற்றோர்களுக்கு நிதியாதரவை அதிகரிக்கும் முயற்சிகளும் இவ்வாண்டு வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன.

அவற்றைப் பற்றிய சில கருத்துக்களை நாடாளுமன்றத்தில் இருந்து சேகரித்து வந்தார், எமது நிருபர் சிவகாமி சுப்பிரமணியம்.

மூத்த ஊழியர்களுக்கு ஏற்கனவே பல சிறப்புத் திட்டங்கள் நடப்பில் உள்ளன.

அன்றாட வாழ்க்கையை நடத்த அவர்களுக்கு நிதியாதரவு தேவைப்படுவதை அரசாங்கம் மனத்தில் கொண்டுள்ளது. 

அதற்கேற்ப அவர்களின் சம்பளத்தை அதிகரிப்பதில் இம்முறை கவனம் செலுத்தப்பட்டுள்ளதைப் புதிய நாடாளுமன்ற நியமன உறுப்பினர் திருவாட்டி K. தனலட்சுமி வரவேற்றார்.

இந்தியப் பெற்றோருக்குப் புதிய திட்டங்கள் உதவும் என்றார் செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு விக்ரம் நாயர்.

சிறிய, நடுத்தர வர்த்தகங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

புத்தாக்கத்துக்கு முக்கியத்துவம் தரும் இத்தகைய சலுகைகள் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு மேலும் உறுதுணையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்