வர்த்தக சங்கங்களுக்கு கைகொடுக்கவுள்ள புதிய திட்டம்
மேம்படுத்தப்பட்ட உள்ளூர் தொழில், வர்த்தக சங்கங்கள் வளர்ச்சித் திட்டம் ஒன்று அறிமுகம் கண்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட உள்ளூர் தொழில், வர்த்தக சங்கங்கள் வளர்ச்சித் திட்டம் ஒன்று அறிமுகம் கண்டுள்ளது.
வர்த்தகச் சங்களுக்கும் சபைகளுக்கும் அது கைகொடுக்கவுள்ளது. வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது நிதியமைச்சர் Heng Swee Keat அது குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
திறன்களை ஈர்ப்பதற்கும் மேம்படுத்துவதற்கும், வலுப்படுத்துவதற்கும் அந்த நிதி ஆதரவு உதவும். SPRING அமைப்பு வர்த்தகச் சங்கங்களுடனும் தொழிற்சபைகளுடனும் இணையவிருக்கிறது.
தொழில்துறைகளுக்கான விரிவான தீர்வுகளைக் காண அவை முனையும்.
மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவளுக்கும் வகையில் அத்தகைய 30 திட்டங்கள் அறிமுகம் காணவிருக்கின்றன.
அடுத்த மூவாண்டில் அவை செயல்படுத்தப்படும். வர்த்தகச் சங்கங்களுக்கும் தொழிற்சபைகளுக்கும் உதவும் வகையில் 30 மில்லியன் வெள்ளிவரை ஒதுக்கவிருப்பதாகத் திரு Heng சொன்னார்.