Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

"கிரேஸ் ஃபூவின் கருத்து முதியோர்களைத் தரக்குறைவாக பேசுவது போல் உள்ளது"

கடந்த வெள்ளிக்கிழமையன்று நடந்த மக்கள் செயல் கட்சி பிரசாரக் கூட்டத்தில் முழு நேர வேலைக்குச் செல்லாமல் இருக்கும் டாக்டர் சீயின் முடிவை தாம் குறைகூறவில்லை. 

வாசிப்புநேரம் -

கடந்த வெள்ளிக்கிழமையன்று நடந்த மக்கள் செயல் கட்சி பிரசாரக் கூட்டத்தில் முழு நேர வேலைக்குச் செல்லாமல் இருக்கும் டாக்டர் சீயின் முடிவை தாம் குறைகூறவில்லை.

அது அவரது சொந்த முடிவு எனக் கூறியிருந்தார் மக்கள் செயல் கட்சியின் திருவாட்டி கிரேஸ் ஃபூ.

வேட்பாளரின் தகுதியைக் கருத்தில் கொள்ளும்போது வேலை அனுபவம் இல்லாதிருப்பது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.

திருவாட்டி ஃபூவின் பேச்சைக் குறைகூறினார் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஜெஸ்லின் கோ.

திரு ஃபூவின் கருத்துகள் வருத்தமளிப்பதாகவும் திரு ஜெஸ்லின் தெரிவித்துள்ளார். இத்தனை ஆண்டுகளாக வேலை இல்லாமல் இருந்ததால் மக்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு போதிய திறமையோ அனுபவமோ டாக்டர் சீக்கு இருக்காது என மறைமுகமாக திருவாட்டி கிரேஸ் பூ கூறியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறுவது, அடுத்த தலைமுறையினரை வளர்ப்பதற்காக முழு நேரமாக வீட்டில் இருக்கும் தாய்மார்களையும் முதியோர்களையும் தரக்குறைவாகப் பேசுவது போல் உள்ளதாகத் திருவாட்டி கோ கூறினார்.

அவர்களுக்குச் சம்பளம் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால், வேலைக்குச் செல்பவர்களை விட அவர்கள் எந்த விதத்திலும் குறைவில்லை.

டாக்டர் சீ சம்பளம் கிடைக்கும் வேலைக்குச் செல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர் புத்தகங்கள் எழுதுவதால் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்துவதாகத் திருவாட்டி கோ கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்